வீட்டு மூலிகைத் தோட்டம்

roof gardenவீட்டு மூலிகைத் தோட்டம்
வீட்டு மூலிகைத் தோட்டம் அமைப்பது எப்படினு பார்க்குறத்துக்கு முன்னர் மூலிகைனா என்னனு தெரிஞ்சுக்கலாமா?
பாட்டி வைத்தியம்
நமது முன்னோர்கள் பெரும்பாலும் ஆங்கில மருத்துவ முறையைப் பின்பற்றவில்லை.  ஆங்கில மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தவில்லை.  மாறாக அவர்கள் பயன்படுத்தியது  பாட்டி வைத்தியம் அல்லது கைவைத்தியம்   எனப்படும் நமது பாரம்பரியமிக்க மூலிகை மருத்துவ முறைகளைத்தான்.
அதில் அனைத்து வகையான நோய்களையும், உடல் உபாதைகளையும் போக்கி ஆரோக்கியமானமகிழ்ச்சியான வாழ்க்கையினை வாழ்ந்து வந்தார்கள்.
மாறிவரும் சூழ்நிலை
தற்போது மூலிகைகளின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது அல்லது முற்றிலும் இல்லாமலே போய் விட்டது.  நமதுவாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழங்களினால் புதிய புதிய நோய்களும், மனஅழுத்தமும் ஏற்பட்டு எவ்வளவு வருமானம் வந்தாலும் உடல் ஆரோக்கியத்தினைப் பேண, கணிசமான
ஒரு தொகையினை ஒவ்வொரு குடுமபத்தினரும் செலவழிக்கும் சூழ்நிலையில்தான் உள்ளோம். இதற்கு முற்றிலும் நாமேதான் காரணம். நாம் என்ன செய்யலாம் உடல் ஆரோக்கியத்தினைப் பேண நாம் ஒவ்வொருவரும் அக்கரையுடன்தான் உள்ளோம். ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று தான் தெளிவாகத் தெரியவில்லை.

ஒரு சில செடி விற்பனை செய்யும் நர்சரிகளில் மூலிகைச் செடிகளை விற்பனைசெய்து வருகிறார்கள் நாம் செய்ய வேண்டியது நமது வீட்டில் நட்டு வளர்க்கத் தகுந்த மூலிகைகளை வாங்கி வந்து நட்டு, பராமரித்து அந்த மூலிகைகளை எடுத்துப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

எங்கு வளர்க்கலாம்?
மூலிகைச் செடிகள் வளர்ப்பதற்கென்று தனியாக இடம் தேடி அலையவேண்டாம் .  நமது வீட்டுத் தோட்டத்தில் வேலியையோ, வீட்டினைச் சுற்றி உள்ள சிறிய இடப்பகுதியிலோ அல்லது மாடியில் தொட்டிகளிலோ வளர்த்துப் பயன் பெறலாம்.  வீட்டினைச் சுற்றிக் கம்பி வேலி இருந்தால் ஒரு சில கொடிவகை மூலிகைச் செடிகளைப் படர விட்டு வளர்க்கலாம்.

என்னென்ன மூலிகைகள்
மூலிகைகள் பல வகைப்படும் அவை வளரும் வகையினைக் கொண்டு சில வகைகளாகப் பிரிக்கலாம்.  சிறு செடிகளாக வளரும் மூலிகைகள், கொடிகளாகப் படரும் மூலிகைகள், குற்றுச் செடிகளாக உயரமாக வளரும் மூலிகைகள் என வீட்டு மூலிகைத் தோட்டத்திற்கு உகந்த மூலிகைகளை வகைப்படுத்தலாம்.
எப்படி வளர்ப்பது?
மூலிகைச் செடிகளை நன்கு மணற்பாங்கான அதிகம் நீர் தேங்காத வகையான மண்ணில் நன்கு வளர்க்கலாம்.  மேட்டுப் பாத்திகளை அமைத்து சிறு செடிவகை மூலிகைகளை வளர்க்கலாம்.  கொடி வகைகளையும் குற்றுச் செடி மூலிகைகளையும் 1 கன அடி குழிகளை எடுத்து நன்கு மக்கிய எரு, மணல், செம்மண் கலவையினை இட்டு நிரப்பி நடவு செய்து பராமரிக்கலாம்.  கொடி வகைகளை வேலிகளில் படர விட்டு வளர்க்கலாம்.
பராமரிப்பு
மூலிகைச் செடி பராமரிப்பில் அதிக சிரமமில்லை.  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நன்கு மக்கிய எருவினைச் செடியின் வளர்ச்சிக்கு ஏற்பச் சிறதளவு இடவும். தேவையான அளவு தண்ணீர்ப் பாய்ச்சினாலே போதுமானது.
அறுவடையும் பயன்படுத்துதலும்
பெறும்பாலும் மூலிகைச் செடிகளில் இலைகளை அறுவடை செய்து பயன்படுத்துகிறோம்.   இளந்தளிரான இலைகளைக் காலை நேரங்களில் அறுவடை செய்து நன்கு தண்ணீரில் கழுவி விட்டுப் பயன்படுத்தலாம்.  பச்சை இலையாகவோ, கசாயம் காய்ச்சியோ, இலைச் சாற்றினை எடுத்தோ பயன்படுத்தலாம்.  ஒரு சில மூலிகைகளின் இலைகளை நிழலில் காயப் போட்டு உலர்த்தி, பொடியாக்கிப் பயன்படுத்தலாம். மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி மூலிகைகளைப் பயிரிட்டு உடல் நோய்களைப் போக்கி உடல் ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள் அடுத்த இதழில் வீட்டுத் தொங்கும் தோட்டம் பற்றிப் பார்க்கலாமா?

திரு. எஸ். ராம்குமார், M.Sc., (Horti)
தோட்டக்கலை விரிவுரையாளர்
விலாசம் 128, மரகதம் கார்டன்,ஜோதிபுரம் அஞ்சல்
பெரியநாயக்கன்பாளையம், கோவை – 641 047
செல்: 9842812540

 

About ராம்குமார் S

View all posts by ராம்குமார் S →