மரப்பயிர் காப்பீட்டுத் திட்டம்

tree-insuranceமனிதனின் தவிர்க்க முடியாத தேவைகளான தடிமரம் மற்றும் எரிபொருள் தேவைகள் காலங்காலமாக காடுகளிலிருந்தே பெறப்பட்டு வந்தன. ஆனால் மக்கள் தொகை தொடர்ந்து அதிகாரித்ததாலும் தொழிற்சாலைகள் அபாரிமிதமாக வளர்ந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகாரித்ததோடு இணைந்து கிராமப்புறத்திலிருந்து மக்கள் நகர்புறங்களுக்குப் புதிதாக குடியோரிய காரணத்தாலும் நம் நாட்டின் மரத்தேவை அதிகாரித்து வருகின்றது. இதனால் வரும் 2020 ல் நமது மரப் பற்றhக்குறை 19 மில்லியன் கன மீட்டரைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. “தேசிய வனக் கொள்கை, 1988 ன்” படி நமது தேவைகளுக்குக்  காடுகளிலிருந்து மரங்களை வெட்டுவது சாத்தியமில்லாமல் போன காரணத்தால் இனி வரும் காலங்களில் மரத்தேவையை வேளாண்காடுகள் வளர்ப்பதால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். எனினும் வேளாண் காடுகள் அதிக அளவில் விரிவாக்கம் செய்ய இயலாமல் போனதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருந்தன. அவை வேகமாக வளர்ந்து, குறுகிய காலத்தில் அறுவடை செய்யக் கூடிய மர இரகங்கள் இல்லாததும், வளர்ந்த மரங்களைத் தடையில்லாமல் உhpய காலத்தில் விலை கொடுத்து வாங்கி விவசாயிகளுக்கு உரிய பயனளிக்கக் கூடிய ஒரு வணிக முறை நாட்டில் இல்லாததும் தான்  எனக் கண்டறியப்பட்டது.

இக்குறைகளைப் போக்கும் விதமாக, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அங்கமான, மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லு}hp மற்றும் ஆராய்ச்சி நிலையம், குறுகிய காலத்தில் அறுவடை செய்யக் கூடிய மரங்களின் புதிய இரகங்களான தைல மரம் (MTP 1), சவுக்கு (MTP 1 மற்றும் MTP 2) மற்றும் மலைவேம்பு (MTP1) ஆகியவைவற்றை உற்பத்தி செய்து வெளியிட்டுள்ளது. மேலும், தீக்குச்சி மரங்கள், எரிசக்தி உற்பத்திக்குத் தேவையான மரங்கள் ஆகியவற்றில் புதிய இரக மரங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த மரங்களைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளர்ப்பதற்காகக் காகிதம், தீக்குச்சி, ஒட்டுப்பலகை, உயிரி எரிசக்தித் தொழிற்சாலை களுடன் இணைந்து விவசாயிகள் மத்தியில் ஒப்பந்த முறை மர வளர்ப்புத் திட்டம்  அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து உலக வங்கி மற்றும் இந்திய வேளாண்மைக் கழகத்தின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்ட மரங்கள் தொடர்பான “மதிப்புக் கூட்டு சங்கிலி திட்டத்தை” வனக்கல்லுரி கடந்த ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாயிகள், மரம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டதால் தமிழகத்தில் வேளாண் காடுகளின் அளவு பெருமளவு அதிகாpத்துள்ளது. இன்று தமிழகத்தில்  29 மாவட்டங்களில் சுமார் 37000 எக்டேருக்கு மேல் வேளாண்காடுகளைப் பயிர் செய்துள்ளனர். விவசாயிகளுக்கு மரத்தொழிற்சாலைகள் குறைந்தபட்ச விலையை உடனுக்குடன் பட்டுவாடா செய்வதாலும், குறுகிய காலத்தில் (5-6 வருடங்களில்) மரங்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடுவதாலும் சிறந்த இலாபத்தோடு இன்று பல விவசாயிகள் வேளாண் காடுகள் வளர்ப்பை ஆதாரிக்கிறர்கள்.

வேளாண்காடுகள் பெரும்பாலும் வறட்சியைத் தாங்கக் கூடியவை, பூச்சி தாக்குதலால் பாதிக்கப்படாதவை என்றhலும் இயற்கைச் சீற்றங்களான புயல், காற்று மற்றும் காட்டு விலங்குகளால் சேதாரம் நிகழக்கூடிய சாத்தியக் அ{கியவை கூறுகள், அதிகமுள்ளன. சமீபத்தில் 2010ல் ஏற்பட்ட தானே புயலில் விழுப்புரம் மற்றும்; கடலு}ர் மாவட்டங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்காpல் இருந்த சவுக்கு மரங்கள் சேதமாகிவிட்டன. இதில் முறிந்து விழுந்த மரங்களின் அளவு 7 இலட்சம் மெட்hpக் டன்னைத் தாண்டும்;. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருந்தது. மீண்டும் வயலைச் சீர்திருத்திப் புதிதாக மரங்களை நட முடியாமல் சிரமப்பட்டனர்.

எதிர்காலத்தில் விவசாயிகள் இது போன்ற இன்னல்களுக்கு ஆளாக நோpடாமல் தடுக்க வனக்கல்லு}hp மற்றும் ஆராய்ச்சி நிலையமும், யுனைடட் இந்தியா காப்பீட்டு நிறுவனமும் இணைந்து நாட்டிலேயே முதன்முறையாகப் புதியதொரு வேளாண் காடுகள் காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்தின்  கீழ் சவுக்கு, தைலம், மலைவேம்பு, பெருமரம், குமிழ், சுபாபுல் மற்றும சிசு ஆகிய ஏழு வகையான மரங்களைக் காப்பீடு செய்யலாம். இத்திட்டத்தை முதலீட்டு அளவில் 1.25 சதவிகிதத்தைப் பிரீமியம் தொகையாகச் செலுத்திவிட்டால், மரங்களுக்குக் காட்டுத் தீ, மின்னல், கலவரம், புயல், காற்று, வெள்ளம் ஆகியவைகளில் ஏதாவாது ஒரு காரணத்தில் சேதம் ஏற்பட்டால் முழு முதலீட்டுத் தொகையையும் காப்பீட்டு நிறுவனம் விவசாயிக-ளுக்கு வழங்கிவிடும். இந்தப் பிரிமியத் தொகை ஒரு ஏக்கருக்கு 300 ரூபாயிலிருந்து 800 ரூபாய் வரை மரங்களுக்கு ஏற்றவாறு மாறுபடும்.  மேலும் மற்ற மரங்களான தேக்கு, செஞ்சந்தனம், வேங்கை மற்றும் சந்தனம் போன்ற மரங்களுக்கும் காப்பீடு செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த காப்பீட்டுத் திட்டத்தில் பல்வேறு வகையான மாற்றங்களைச் செய்வதற்கான, குறிப்பாக ஒரு முறை மட்டும் காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கும், வறட்சியால் அழியும் மரங்களைக் காப்பீடு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீடு வழங்குவதற்கும் மற்றும் ஒரு விவசாயினுடைய காப்பீடு செய்யப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டாலும் அதற்கான நஷ்ட ஈட்டை வழங்குவதற்கும் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால் வரும் காலங்களில் மரக் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் செயல்படும்.

இத்திட்டம், வேளாண்காடுகள் வளர்ப்பை மேம்படுத்தி, விவசாயிகள் தடையில்லா உறுதியான வருமானத்தைப் பெற உதவுவதோடு, தமிழகத்தி-லுள்ள மரத்தொழிற்சாலைகளுக்கு சிறந்த தரத்தையுடைய மூலப்பொருட்களை தொடர்ந்து கிடைக்கச்செய்யும் என்பது உறுதி. அதிக அளவில் மரங்களை விவசாயிகள் வளர்ப்பதால், காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதோடு, இயற்கைக் காடுகள் அழியாமலும் பாதுகாக்கப்படும்.

வழங்கியவர்

முனைவர். கா.த.பார்த்திபன்
வனமரபியல் துறை
வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்
மேட்டுப்பாளையம்.

About Dr K T பார்த்திபன் TNAU - Forest College

View all posts by Dr K T பார்த்திபன் TNAU - Forest College →