தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பரிந்துரைகள்

ak00fwvsகரீப் பருவ மக்காச்சோளத்திற்கான விலை விவசாயிகளை மகிழ்விக்கும்.    
    
    இந்தியாவில், மக்காச்சோளம் மூன்றாவது முக்கிய தானியப் பயிராகும், மக்காச்சோளம் மொத்த உற்பத்தியில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பீகார், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் சேர்ந்து 62 சதவிகிதம் பங்களிக்கிறது.  திருப்பூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி மற்றும் சேலம் ஆகியவை மக்காச்சோளம் பயிரிடும் முக்கிய மாவட்டங்களாகும்.
    
    அமெரிக்க ஐக்கிய வேளாண் துறை (USDA) தகவலின் படி, 2016 ஆம் ஆண்டு இருப்பு மற்றும் உள்நாட்டு நுகர்வு முறையே 8 இலட்சம் டன்கள் மற்றும் 222 இலட்சம் டன்களாகும். இந்தியா பாரம்பரியமாக தென்கிழக்கு நாடுகளுக்கு மக்காச்சோளம் ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகும். ஆனால் கதிர்களின் குறைந்த தானிய செறிவு, வறட்சி மற்றும் வெப்ப சலனம் போன்ற காரணங்களால் உள்நாட்டு உற்பத்தி குறைந்துள்ளதால் இந்தியா 2.5 இலட்சம் டன்கள் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. மேலும் தற்போதைய பருவத்தின் பற்றாக்குறையைச் சமாளிக்க மற்றொரு 5 இலட்சம் டன் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    
    தமிழ்நாட்டின் மக்காச்சோள உற்பத்தி உள்நாட்டுத் தேவைகளில் 50 சதவிகிதம் மட்டுமே பூர்த்தி செய்கிறது. மக்காச்சோளம் அதிக உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து வரும் வரத்து மீதித் தேவையை நிறைவு செய்கிறது. வர்த்தக மூலங்களின் படி, இந்த பருவத்தில் பீகார் மற்றும் ஆந்திராவிலிருந்து எந்த வரத்தும் இல்லையயன்றும், எதிர்கால தேவைக்காக, வர்த்தகங்கள் மற்றும் கோழி நிறுவனங்கள் சிறிதளவு மக்காச்சோளம் கையிருப்பு வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில், 30 – 35 சதவிகிதம் சாகுபடிப்பரப்பு இப்பருவத்தில் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
    
    இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரகமேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 13 ஆண்டுகளாக உடுமைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் அறுவடையின் போது பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.1600/- முதல் ரூ.1700/- வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மஞ்சளின் இடைக்கால விலை முன்னறிவிப்பு
    
    2015 ம் ஆண்டல் மஞ்சள் நடவின் போது வறட்சி நிலவியதால் தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், மகாராஷ்ரா மற்றும் கர்நாடகா ஆகிய மாழலங்களில் மஞ்சளின் பரப்பளவு குறைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக ஆந்திரபிரதேசம் மற்றும் கடலோர பகுதிகளில் பெரும் புயல்களின் தாக்கத்தாலும் மற்றும் பருவம் தவறிய வானிலையின் காரணமாகவும் மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் மஞ்சளின் பரப்பளவு 20 % அதிகரித்துள்ளது. ஆனால் அறுவடைக்கு முன் மழை அதிகரித்ததாலும் பருவநிலை மாற்றத்தாலும் மஞ்சளின் தரம் குறைந்துள்ளது. ஈரோடு சந்தையில் விலை உயரும் போது மட்டும் மஞ்சள் வரத்து அதிகரிக்கின்றது. வரத்து அதிகரித்ததும  உடனடியாக விலை சரிவு ஏற்பட்டு மீண்டும் சீரான விலையை அடைகின்றது.
    
    நல்ல விலையை எதிர்பார்த்து விவசாயிகள் ஈரோடு சேமிப்பு கிடங்கில் 1.0 இலட்சம் டன்கள் மஞ்சள் சேமித்து வைத்துள்ளனர். இந்தியாவில் பண்டிகை காலம் முன்னிட்டு மஞ்சளின் தேவை அதிகரிக்கும். எனவே, செப்டம்பர் மாதத்திற்கு மேல் தரமான மஞ்சளுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது.
     
    தரமான மஞ்சளின் பண்ணை விலை செப்டம்பர் 2016 வரை, குவிண்டாலுக்கு ரூ.8,000 – 8,500 ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, மஞ்சள் உற்பத்தியாளர்கள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்,
வேளாண் மற்றும் ஊரகமேம்பாட்டு ஆய்வு மையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி எண் :  0422 – 2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
சிறுதானியங்கள் துறை,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி எண் :  0422 – 2450507

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்
பேராசிரியர் மற்றும் தலைவர்,
வாசனை மற்றும் தோட்டக்கலை பயிர்கள்,
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோயம்புத்தூர் – 641 003.
தொலைபேசி :  0422 – 6611284

“சுகாதாரமான கோழியிறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு”த் தொடர்பான தொழில்நுட்பம் சார்ந்த தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி
    தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கி வரும் கோயம்புத்தூர், சரவணம்பட்டி, 63, காளப்பட்டி பிரிவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், குஜராத்திலுள்ள இந்திய அரசின் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிலையத்தின் நிதியுதவியுடன் அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம் சார்ந்த டிப்ளமோ மற்றும் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு வருகின்ற செப்டம்பர் 2016 முதல் நவம்பர் 2016 வரை, 6 வாரங்கள் “சுகாதாரமான கோழியிறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு” என்ற தலைப்பில் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியினை இலவசமாக நடத்துகின்றது.

1. இத்தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியில், கோழியிறைச்சி உற்பத்தி, இறைச்சிப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வழிமுறைகள் குறித்து நான்கு வாரங்கள் வகுப்பறைப் பயிற்சியும், இரண்டு வாரங்கள் செய்முறைப் பயிற்சியும் நடைபெறும்.
2. இந்த இலவசப் பயிற்சிக்கு, 18 முதல் 40 வயதுடைய, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த, அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கொண்ட டிப்ளமோ அல்லது பட்டம் பெற்ற 25 பட்டதாரிகள் மட்டும் விண்ணப்பம், தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுப் பயிற்சி அளிக்கப்படுவர்.
3. பயிற்சியின் போது பயிற்சியாளர்களுக்குக் காலை மற்றும் மாலையில் தேநீரும், மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்.
4. இத்தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்கள் கோழியிறைச்சி, மற்றும் இறைச்சிப் பொருட்களை உற்பத்தி செய்து, விற்பனை அங்காடிகளை அமைத்து, தொழில்முனைவோர்களாக மாறலாம்.
5. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள தகுதியுடையவர்கள் கோவை, சரவணம்பட்டி, 63, காளப்பட்டி பிரிவில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தை நேரிலோ அல்லது 0422 – 2669965 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

About கோபிநீலன் M

View all posts by கோபிநீலன் M →