டேக்ஸ் கார்னர்

xnbqffcqகேள்வி – 1

என்னுடைய Sales Tax கணக்குகளை மாதந்தோறும் (manual form) பேப்பர் வடிவில் வணிக வரித்துறைக்குச் சமர்ப்பித்து வருகிறேன்.  இனி வரும் காலங்களில் e-filling செய்ய என்ன செய்ய வேண்டும்?

பதில் – 1

நீங்கள்New portel ல் login செய்ய வேண்டும்.  அதற்கான இணையதள முகவரி http://ctd.tn.gov.in.அதன் பிறகு மாதாந்திர நமூனாவை efiling செய்ய வேண்டும் அதற்கான வழிமுறைகள் இந்த இணைய தளத்திலேயே உள்ளன.

கேள்வி – 2

எனது தந்தை எனக்கு அவர் வைத்திருந்த பங்குகளை (shares)  என் பெயருக்கு மாற்றி அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்.  இதை நான் விற்றால் வரி ஏதாவது உண்டா?

பதில் -2

தங்கள் தந்தை வைத்திருந்த பங்குகளை விற்றால் அதற்கான  Capital Gain வரி வரும்.  இதை நீங்கள் 12 மாதத்திற்கு மேல் வைத்திருந்தால்,Long term capital gain வரும்.  இல்லையயன்றல், short term capital gain வரும்.

கேள்வி – 3

எனது கான்ட்ராக்டர் என்னிடம் சேவை வரி வசூல் செய்து விட்டு அதை அரசுக்குச் செலுத்தவில்லை என்று நினைக்கிறேன்.  அதை எப்படி சரிபார்த்துக் கொள்வது?

பதில் -3

நீங்கள் செலுத்திய சேவை வரியை கான்ட்ராக்டர் அரசாங்கத்திற்குச் செலத்திவிட்டாரா எனச் சோதிக்க எந்த வழியும் இப்போதைக்கு இல்லை.

கேள்வி – 4

நான் Sebi க்கு ஓர் கம்பெனி பங்குகளின் ஏற்ற இறக்கத்தைப் பற்றி சந்தை ஏத்து வருகிறேன் அதை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டும்?

பதில் -4

SEBI இயக்கும் ஸ்கோர்ஸ் (SCORES) எனும் இணையதளத்தில் உங்கள் புகாரை தக்க ஆவணங்களோடு பதிவு செய்யலாம். இப்புகாரை பதிவு செய்யும் போது உங்கள் தொடர்பு விவரம் அளிப்பது அவசியம். புகாரை பதிவு செய்தபின்னர் ஓர் எண் வழங்கப்படும்.