“”5 மாத குழந்தைக்கு” வழங்குவதற்காக காலாவதியான ஊட்டச்சத்து மருந்தை விற்ற நிறுவனம்!!!

4jla4laaகோவையில் 5 மாத குழந்தைக்கு வழங்குவதற்காக காலாவதியான ஊட்டச்சத்து மருந்தை விற்ற மருந்து நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவையை அடுத்து மதுக்கரை மரப்பாலம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் லைலா. இவருக்கு 5 மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

அந்த குழந்தைக்கு ஊட்டச்சத்து வாங்குவதற்காக கோவை பொள்ளாச்சி சாலை கரும்புக்கடையில் உள்ள ஒரு மருந்து விற்பனை நிறுவனத்துக்கு லைலா சென்றார். அங்கு 42/- ரூபாய் கொடுத்து ஊட்டச்சத்து மருந்து வாங்கினார்.

பின்னர் கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அங்கு சென்று பார்த்தபோது அந்த ஊட்டச்சத்து பயன்படுத்தும் தேதியில் இருந்து காலாவதியானது தெரியவந்தது. அதன்பிறகு அந்த ஊட்டச்சத்து மருந்தை எடுத்துக் கொண்டு லைலா மருந்து விற்பனை நிறுவனத்திற்கு சென்று, அதற்கு மாற்றாக காலாவதி ஆகாத ஊட்டச்சத்தை தருமாறு கேட்டார்.அதற்கு அந்த நிறுவனத்தினர், விற்ற பொருளை வாங்க மாட்டோம்.

அதற்குப் பணமும் தரமாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இதனால் கோபம் அடைந்த லைலா கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் காலாவதியான ஊட்டச்சத்து மருந்தை விற்றதற்கான அந்த மருந்து விற்பனை நிறுவனம் தனக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நடுவர் ஸ்ரீராமுலு, மனுதாரர் லைலாவுக்குக் காலாவதியான மருந்தை விற்ற நிறுவனம் ரூ,10,000/- ஆயிரம் இழப்பீடும் வழக்குச் செலவு ரூ.1000/- வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

About வழக்கறிஞர் A K ராஜேந்திரன்

View all posts by வழக்கறிஞர் A K ராஜேந்திரன் →