Category: விவசாயம்

முகநூல் பக்கம்…

இதற்கு நிகரானது எதுவும் இல்லை… இந்த சிங்கம் போன்ற காங்கேய இன மாடுகளைக்  சாணத்துக்காகவும் மூத்திரத்துக்காகவும் வளர்ப்பது போன்று இப்போதைய இயற்கை வேளாண்மை அறிவாளிகள் சித்தரிக்கிறார்கள்.அவற்றின் உழைப்பின் பாத்திரத்தை யாரும் பேசுவதே இல்லை.காரணம் அவற்றிடம் வேலை வாங்குமளவு இந்தத் தலைமுறையில் யாரும் பயிற்சி பெறவில்லை. உழைக்கவும் தயாராக இல்லை.உழைப்பைப் புறக்கணித்தால் காங்கேய இன மாடுகள் மற்ற…

வெண்டையைத் தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் முறைகளும்

இந்தியாவில் பல்வேறு வகையான காய்கறிப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.  அவற்றுள் வெண்டைப் பயிர் முக்கியமான பயிராகக் கருதப்படுகின்றது.  ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட பூச்சிகளால் வெண்டை தாக்கப்படுகின்றது.  வெண்டையைத் தாக்கும் முக்கிய பூச்சிகளில் காய்த் துளைப்பான், சாறுஉறுஞ்சும் பூச்சிகளும் அடங்கும்.  இவற்றுள் துளைப்பான்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.  ஏனெனில், இவ்வகைப் பூச்சிகள் அதிகப்படியான, விளைச்சல் இழப்பை ஏற்படுத்துகின்றன. துளைப்பான்கள்,…

உழவில்லா வேளாண்மை. – ஒளி

  இயற்கை வேளாண்மையின் தந்தை என்று அழைக்கப்படுபவர் மசானபு ஃபுகோகா அவர்கள். உழவில்லா வேளாண்மையை இவ்வுலகிற்குக் கற்றுத் தந்தவரும் ஆவார். இவர் ஜப்பான் நாட்டு விவசாயி. இவர் இயற்கை வேளாண்மைக்குத் திரும்புவதற்கு முன், தனது 25 வயதில் யகோஹாமா கஸ்டமஸ் பீரோவிலுள்ள தாவர ஆய்வுப் ( PLANT PATHOLOGY ) பிரிவில் பணியாற்றினார். அடிப்படையில் இவர்…

கொஞ்சம் சுற்றுபுறச்சூழல் கொஞ்சம் வேளாண்மை

மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதுதான் மிகப்பெரும் கேள்வி. இம்மாதம் சூழல்இயலின் மையக் கருப்பொருளான புலிகளைப் பற்றி பேசுவோம். இத்தருணத்தில், புலிகளால் பலியானவர்களுக்குப் பிரார்த்தனையுடன் கூடிய அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கிறோம். உலகில் ராயல் பெங்கால், தெற்கத்திய சீனம், இந்தோசீனம், சுபத்திரன், சைபீரியஸ், பாலி, ஹாஸ்பின்,…

– மாசில்லா மாற்றுச் சக்தி. விலங்குகளின் வேலைத்திறன்.

    பழம்பெருங் காலங்களிலிருந்தே மனிதர்கள் பல்வேறு வகையான பணிகளைச் செய்ய மாடு, எருமை, குதிரை, யானை முதலிய விலங்குகளை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். தற்போது இந்தியாவில் ஏறக்குறைய 70 மில்லியன் பளு இழுக்கும் கால்நடைகள் உள்ளன. இன்றும் பல்வேறு கிராமப்புறங்களில் விவசாயத்திற்கு முதுகெலும்பாகவும், போக்குவரத்திற்கு உதவுவதாகவும் மாடு மற்றும் எருமை, எருதுகள் விளங்குகின்றன. ஒட்டகம், யானை, குதிரை,…

கால்நடைப் பண்ணைகளுக்கான சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள்.

ஆடுகளுக்கான நகரும் உண்ணிகள் நீக்க குளியல் தொட்டி 1. 9 அடி நீளம், 3 அடி அகலம், 3 அடி உயரம் கொண்ட, 80 கிலோ எடையுடன் சுமார் 800 லிட்டர் தண்ணீர் பிடிக்கும். உண்ணி, தெள்ளுப்பூச்சி போன்ற புற ஒட்டுண்ணிகளை அழிப்பதற்காகப், புதியதாக வடிவமைக்கப்பட்ட நகரும் மருந்துக் குளியல் தொட்டி இதுவாகும். 2. இந்த…

தொழில்நுட்பம்.,பண்ணைக் கருவிகள்.

களை அறுப்பான் (Agri Weed Cutter – Brush Cutter) 1. 2 ஸ்ட்ரோக் என்ஜீன் – 43 CC (Cubic Capacity) 2. பெட்ரோல் + ஆயிலில் இயங்கக் கூடியது. 1 லிட்டர் பெட்ரோல் + 50 மில்லி 2 டி ஆயில். 1 மணி நேரத்திற்கு 600 மில்லி வரை பெட்ரோல் செலவாகும்.…

முகநூல் பக்கம்….

ஒரு முறை உயிர் தரும் தாயும் தந்தையும் கடவுள் என்றால், ஒவ்வொரு நாளும் உயிர் வாழ உணவு தரும் உழவர்கள்? அனைவருக்கும் வணக்கம்!!! மிகவும் சந்தோ­மான தருணம் இது, அதை உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி. என் வயலில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட உளுந்து அனைத்தும் விற்பனை செய்துவிட்டேன் தோழர்களே. அனைத்தும் நேரடியாகக் கடந்த 3…

மூங்கில்.- பச்சைத் தங்கம்.

நாட்டின் மொத்த காடுகளில் 8.96 மில்லியன் யஹக்டர் மூங்கில் வனம் ( ராய் புற்றும் செளகான் 1990 ). பொதுவாக மூங்கில் காடுகள் கீழ் தளத்தில் காணப்படும். இந்தியாவில் எல்லா விதமான காடுகளிலும் மூங்கில் வளரக்கூடியது. வெப்ப, மிதவெப்ப மற்றும் ஈரக்காடுகளிலும், சராசரி மழை அளவு 1200 மிமீ முதல் 4000 மிமீ மற்றும் வெப்பநிலை…

மூலிகை, எண்ணெய்… வெட்டிவேர்.

வெட்டி என்றால் பாதை என்றொரு அர்த்தமுண்டு. ஆங்கிலத்தில் CUSCUS grass என்று கூறுவார்கள். வெட்டிவேர் குறித்த கருத்தரங்கு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 11 ஏப்ரல் 2016 ல் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு சர்வதேச வெட்டிவேர் ஆராய்ச்சி அமைப்பு,  இந்தியா வெட்டிவேர் ஆராய்ச்சி அமைப்பு மற்றும் இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் வெட்டிவேர் ஆராய்ச்சியாளர்களும் பங்கு கொண்டு சொற்பொழிவாற்றினார்கள். டாக்டர்.…