COP 21 PARIS புதிய மைல் கல் – 187 நாடுகள் இணைந்து எடுத்த தீர்மான ம் -$100 பில்லியன் நிதி ஒதுக்கீடு – உறுதியான செயல்பாட்டிற்கான வழிமுறைகள்

populationமக்கள் தொகை 1960 ல் 300 கோடி , 2000த்தில்600 கோடி 2013 ல் 700 கோடி, 2050க்குள் 900 கோடியிலிருந்து (குறைந்த பட்சமாக) 1000 கோடி என ஆகலாம் என்று ஓர் கருத்தும் உள்ளது.  கடந்த சில வருடங்களாக சராசரி வெப்பம் அதிகமாக உள்ளதாக பல ரூபத்தில் நாம் கண்டுள்ளோம்.  உத்திரகண்டில் நடந்த நிலச் சரிவு காஷ்மீர் வெள்ளம், சென்னை நகர் மற்றும் வட தமிழக மாவட்டத்தில் வெள்ளம், போன்றவை நம் நினைவில் நன்றாக நின்றிருக்கலாம்.  இதற்கு காரணம் புவி வெப்பம் அடைவது ஓர் முக்கிய காரணம் என்பதை நாம் யாரும் மருக்க முடியாது.  2006 ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான செய்தி குரும்படமான என்ற குறும்படத்தி உருவாக்கிய திரு.ஆல்கோல் (அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் 2000  ஆம் போட்டியிட்டவர்)  நோபல் பரிசும் பெற்றார். இந்த திரைபடத்தில் கடந்த 50-60 ஆம் ஆண்டுகளாக பூமி மாறியுள்ளதை நன்றாக விளக்கினார்.  இதன் மூலம் இந்த கூடுதல் வெப்பம் எப்படி வந்தது என விளக்கங்கள், படங்கள் புள்ளி விவரங்களை அளித்தார்.  மேலும் இதை பார்த்தவர்கள் 1991 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் க்யோட்டோ நகரத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் ஒரு சில முக்கிய நாகளான , அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஒப்புக்கொள்ளாமல் போனதன் விளைவாக மற்ற நாடுகள் அனைவரும் உடன்படும்படி உள்ள ஓர் தீர்மானத்தை எட்ட மொத்த 21 ஆண்டுகளாக இந்தபுவி வெப்பத்தை கையாள ஓர் உறுதியான தீர்மானம் கொண்டு வர மிகவும் கடினமாக முயற்சித்தனர்.  கடந்த முறை பேருநகரில் லீமா நகரில் சந்தித்த போது முக்கிய வாசகங்கள் கொண்டு வர முயற்சி செய்தும் ஓர் முக்கிய முடிவை எட்ட முடியவில்லை.

அமெரிக்காவுக்கு ஜனாதிபதியான பிறகு பாராக் ஒபாமா எடுத்த முக்கிய முடிவுகளில் 1991 ஆம் ஆண்டு கியோட்டோ  நகரின் ஒப்பந்தத்தை அங்கீகரித்து ஒப்புக்கொண்டதன் பிறகு நல்ல முன்னேற்றம் கிடைத்தது எனக் கூறலாம்.  பல பூமி வெப்பம் அடைய காரணமாக உள்ள பசுமையிள்ள வாயுவை                            அதிகமாக வெளிவிடும் நாடுகளில் அமெரிக்கா ஓர் பெரிய பங்கு வகிக்கும் போது அவர்கள் தங்களது நிலையையும் அனல் மின் நிலையங்களிலும் எண்ணை நிறுவனங்களிலும் அவர்கள் செய்துள்ள முதலீட்டை காட்டவே பல முறை எந்தவித முன்னேற்றமும் கடந்த பேச்சு வார்த்தையில் எட்டப் பட முடியவில்லை.  மேலும் ஆஸ்திரேலியா, சவுதிஅரேபியா, வெனிசுலா போன்ற நாடுகள் நிலக்கரி மற்றும் கச்சாஎண்ணெயை வைத்து பொருளாதாரம் நடத்தும் போது அவர்கள் வேறுபட்ட சிந்தனையில் கொண்டுவருவது கடினமாக இருந்தாலும் பல அறிவின் சார்ந்த தகவல்கள்

அளிக்கப்பட்டு வந்தன  கடந்த சில சந்திப்புகளில், பாரீஸ் நகரில் நடந்ததில் என்ன சிறப்பு என் று கேட்பீர்கள் (2050 ம் வருடத்திற்குள் பூமி 2டிகிரி செல்சியஸ் மேல் வெப்பம் அடைந்து மனித இனத்திற்கே பெரும் அழிவை கொண்டு வர சாத்திய கூறு அதிகம் என பல கருத்துகளும், தற்போதைய இயற்கை பேரிடர்களும் அச்சுருத்தியதை கண்டு அனைத்து நாடுகளும் ஓர் சாத்திய நடைமுறை தீர்மானத்தை எட்ட முடிவு செய்து, பாரீஸ் நகரில் பிரஞ் ஜனாதிபதி பாரன்அவே, ஹாலந்து அவர்களின் முயற்சியில் சிறிய மற்றும் வளரும் நாடுகளும் தங்களது கருத்தையும் பங்கையும் அளித்து பெரிய நாடுகள் மற்றும் பெரிய பசுமையில்ல வாயுவை வெளி நாடுகளுக்கு ஓர் நெருக்கத்தை கொடுக்கவும் செய்தார்.  ஆகையினால் 2015 ம் ஆண்டு பாரீஸ் நகரில் ஓர் முக்கிய தீர்வை எட்ட ஒரு சிறு பங்கை அளித்தார்.  அடுத்தது, அந்த முக்கிய தீர்வு என்ன என்பதை பார்க்கலாம்.
ஐயங்களும் சந்தேகங்களும்…

1. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் என்று எப்படி அடையாளம் கொள்வது?
2. 100 பில்லியன் டாலர் நிதியை எந்தெந்த நாடுகள் எவ்வளவு அளிக்க வேண்டும்? அப்படி தங்களது பங்கினை அளிக்கத் தவறினால் என்ன விளைவுகள்?
3. கப்பல் துறையையும், விமானத்துறையையும் இந்த தீர்மானத்தில் இடம் பெறவில்லை (எந்த நாட்டின் பொருப்பு) அப்போது இந்தத் துறைகளை கட்டுப்படுத்த என்ன வழி?
4. நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்களின்  எதிர்காலம் என்ன?
5. கார்பன் வர்த்தகம் வளர நல்ல வாய்ப்பு உள்ளது. அதை சரியாக சர்வதேச அளவில் நிர்வாகம் செய்வது எப்படி? (வழிகள் மற்றும் விதிமுறைகள்). கார்பன் விலையை சரியாக மதிப்பிடும் வழிமுறையை அனைத்து நாடுகளும் ஒப்புக் கொள்வது முதல் கட்டம், எனவே இந்த ஒப்பந்தம் எட்ட பெரும் முயற்சிகள் தேவை.

எந்தவித இலக்கோ கட்டுப்பாடோ இல்லாமல் இருந்த காலம் போய் அடையாளம் கொள்ள ஒர் இலக்கை எட்டி (187 நாடுகள், அமெரிக்கா, சீனா, இந்தியா போன்ற முக்கிய நாடுகள்) ஓர் புதிய மயில்கல் ஒன்றை அடைந்துள்ளனர் என்றே கூறலாம். இருப்பினும் இது துவக்கமே. நாம் எல்லோரும் பூமித்தாயின் பிள்ளைகள். இந்தத் தாயினை காப்பது அனைவரின் கடமை. ஆகையால் வரும் ஏப்ரல் 22ம் தேதி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் இந்த ஒப்பந்தத்தில் கையயழுத்திட்டு ஒவ்வொரு 5 ஆண்டும் புதிய சாதனைகள் படைத்து மனித உலகத்தையும் பூமியையும் காப்போம்.