Editorial

“வாணிகம் செய்வார்ருக்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோற் செலின்” – குறள்

கோவை வணிகம் வணிகம், வாணிகம், வர்த்தகம், வியாபாரம், பிஸினஸ் எனப் பல்வேறு சொற்களால் அழைக்கப்படுகிறது. வணிகம், இது நான்குவகை வருணத்தாருள் ஒருவகை.   வருங்காலத்தைச் சார்ந்தவர் தொழிலாகும்.

வடமொழியில் பிராம்மண, சத்திரிய, வைசிய, சூத்ர எனக் கூறப்படும் தொழில் சார்ந்து மக்கட் பிரிவை நான்கு வகையாகப் பாகுபாடு செய்தனர்.  தமிழில் அது அந்தனர், அரசர், வணிகர், வேளாளர் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனைத் தான் பின்னர் ஜாதி எனக் கூறினர். ஆகவே ஜாதி என்பது தொழில் சார்ந்த பாகு ஆகும்.  அந்தந்த ஜாதியில் பிறந்தவர்       அந்தந்த தொழிலை கற்றுக்கொண்டனர். அத்தொழில்களை மேன்மைப்படுத்தினர், ஊழைத்தனர் உயர்ந்தனர். அது அவர்கள் இரத்தத்தோடு கலந்துவிட்டது. அதனால் “”செய்யும் தொழிலே தெய்வம்”  எனப் போற்றப்பட்டது.

இதில் வைசியர் என்போர்  பிரிவில் வணிகர்களும், வேளாளர்களும் அடங்குவர்.  அவர்கள் ஓரிடத்திலிருந்து பிரிதோர் இடத்திற்கு என்னென்ன பொருட்கள் தோவையோ அவற்றை கொண்டு சென்று விற்றுப் பண்டம் மாற்றுச் செய்து வந்தனர்.   நாளடைவில்  “பணம்’  இடைப்பொருளாக வந்து நின்றது. அது செல்வம் என்று பெயர் பெற்றது. அது இத்தொழிலில் மிகுதியாகக் கிடைத்ததால் அவர்கள் செல்வந்தர் ஆயினர். அன்று மட்டுமன்று இன்றும் அவ்வாறே.

இத்தகைய வணிகர் வணிகம் செய்யும் போது பிறர் பொருளையும் தன் பொருள் போல் பேண வேண்டும். பின் அப்பொருள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கவேண்டும். கொள்வது மிகையும், கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல்  வேண்டும். அதாவது நாம் வாங்கும் போது அதிகமாகப் பொருட்கள் கிடைக்க வேண்டும், நாம் கொடுக்கும் போது குறைவாகக் கொடுக்க வேண்டும், அப்போது தான் நமக்குச் செல்வம் குவியும் என்ற எண்ணத்தை நீக்கி இரண்டு நிலையிலும் ஒரே மனதோடு  செய்தல்  வேண்டும் என்பதாம். அதனால் தான்  நடுவு நிலமை எனும்  அதிகாரத்தில் வாணிகம் என்னும்  இக்குறள் கூறப்பட்டுள்ளது..

கோவை வணிகம் கோவை மாவட்டத்தின் வணிகநிலைகளை மக்கட்கு எடுத்து விளக்குவதற்காக வெளிவரும் இதழ் ஆகும். அது மட்டுமல்லாமல் தொழில்களையும், தொழில் செய்வோரையும், தொழில் முறையையும், அதன் எழுச்சி வீழ்ச்சி நிலைகளையும் தன்னால் முடிந்த மட்டும் சேவையாக  விளக்கிக் கூற முயல்கிறது.

அதனால் “கோவை வணிகம்’ ஆகிறது.  இது தொடர்ந்து வளர்ந்து வர வணிகர்களும் பொது மக்களும் ஆதரவு தரவேண்டும். அப்படித் தந்து அதனையும் ஒரு தொழிலாய்த் பத்திரிக்கை தொழிலாய் உயரச் செய்ய வேண்டும். செல்வம் தேடும் ஒரு கலையாக மாற்ற வேண்டும். அதனைத் தமிழக மக்கள் அனைவரும் செய்வாராக.

“”திரைகடல் ஓடியும் திரவியம் தேடு”