மிக குறைந்த விலையில் வாங்கி படியுங்கள்...

Arangaswamyகோவை வணிகம் 2012 ஆண்டு அன்றைய நாளில் நிலவிய சூழலை வைத்து தொழில், விவசாயம், சுற்றுப்புறச்சூழல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்திகளாக மக்களுக்கு அளிக்க முன்வந்தோம். தொழில் புரிபவர்கள் விவசாயத்தையும் சுற்றுப்புற சூழலையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் பலர் தொழில் துறையில் உள்ள சவால்களை அறியாமலும் சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் தொழில் புரிபவர்கள் மீதும் விவசாயிகள் மீதும் தாக்கங்கள் / அழுத்தங்கள் கொடுத்து அவரவர் தொழில்களும், விவசாயிகளும் சரிவர இயக்க முடியாத நிலையும் உருவானது. எல்லோருக்கும் பிழைப்பு என்பது ஒன்று வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அதற்கு பிறருக்கு சொந்தமான பொருட்கள், அல்லது அரசுக்கு சொந்தமான உடைமைகளையோ அல்லது இயற்கையையோ சேதப்படுத்தும் வண்ணம் உள்ள தொழில் நுட்பத்தையும், இடுபொருட்களை தவிர்த்து ஓர் ஒருகிணைந்த வளர்ச்சி காண வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்த இதழ் வெளியிடப்பட்டு வருகிறது. புதிய தொழில் நுட்பங்கள் கண்டுபிடிப்புகள், விஞ்ஞானங்கள் போன்றவை மக்களுக்கு எளிய முறையில் எல்லோருக்கும் புரியும் வண்ணம் கொண்டு வருவதே எங்களது இலக்கு.

கோவை பகுதியில் பல ஆண்டுகளாக பல முன்னோடி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த காலத்தில் ஜி.டி. நாயுடு, கிரைண்டர் தொழில், மிக்சி தொழில், பம்பு செட்டுகள் என பல துறைகளில் கோவை சார்ந்தவர்கள் கொடி கட்டி பறந்ததுண்டு. இன்றும் காட்டன் ஆடைகளுக்கு நல்ல வரவேற்புண்டு. கோவையைச் சுற்றி மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரல் அமைந்திருப்பது மண்வளம் ஏராளம். இந்த பகுதியில் ஓடிவரும் ஆறுகளான பவானி, நொய்யல், பாலாறு, சிறுவாணி, என்ற பல நீர் அமிர்தங்கள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளோம். அவை இருந்தும் இந்த அபூர்வங்களை நாம் சமீபகாலமாக பேணிக் காக்க தவறியுள்ளோம் என்பது உண்மை. பல காலமாக விவசாயிகள் இயற்கை ஒன்றியே பயிர் செய்து பிழைப்பு நடத்தும் போது இயற்கை பேரிடர்கள் நம்மை தாக்கவில்லை. ஆனால் இன்றோ இயற்கைக்கு மாறான விவசாயம் செய்வதால் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்து நம் அன்றாட உண்ணும் உணவே கலப்படமாகவும், நச்சாகவும் மாறியுள்ளது. இதை சரி செய்யவே எங்கள் இதழில் முனைந்து வருகிறோம். மேலும் வருங்கால சந்ததிகள் தங்கள் படிப்பிலிருந்து அன்றாட வாழ்க்கையிலும் தொழிலோ அல்லது விவசாயம் தேந்தெடுத்தால் அதல் தொழில், விவசாயம் , சுற்றப்புறச் சூழல் ஆகிய முப்பரிமான பார்வையைக் கொண்டு தங்கள் வாழ்வை வாழ நாங்கள் உந்துதலாக இருக்க ஆசைப்படுகிறோம்.

முடிவாக கோவை பகுதியிலிருந்து இச்செய்தி தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா மற்றும் உலகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் இந்நற்செய்தி சென்றடைய நாங்கள் எல்லா வல்ல இறைவனிடம் வேண்டுகிறோம்.

இப்படிக்கு,

ஆசிரியர்.