×

Warning

JFolder: :files: Path is not a folder. Path: images/Books/2019/jan-2019

Loading...

இவ்விதழில், கோழி வளர்த்து, ஆடு வளர்த்து நாள்தோறும் கையில் ஏ.டி.எம். வைத்தவர் பெறுவது போல, நாமே வங்கியை நாடாமல் பெறுவதற்குரிய வழி நன்கு விளக்கப்பட்டுள்ளது. அறிந்து ஆவன செய்வார்களாக.

இவ்விதழை முழுமையாக படிக்க

மின் புத்தகங்கள்

  • இயற்கை பண்ணையம்

  • ஒருங்கிணைந்த பண்ணையம்

கேள்வி பதில்கள்

கேள்வி - 1

கேள்வி - 1

எனக்கும் என் கணவருக்கும் குழந்தைகள் இருக்கவில்லை. இந்நிலையில், எனக்கு என் கணவர் அவரது தனிப்பட்ட சொத்துக்களைச் செட்டில்மெண்ட் பத்திரங்கள் மூலம் எழுதி வைத்தார். அவர் காலமாகிவிட்டார். எனக்குக் குழந்தைகள் இல்லாத காரணத்தினால், எனக்கு அந்திமக் காரியங்கள் செய்ய வேண்டுமென சட்ட ஆலோசனைப்படி எனது சகோதரி மகனை சுவீகாரமாகத் தத்தெடுத்துக் கொண்டு அதை 11.07.1989ம் தேதி பதிவும் செய்து கொண்டேன். நான் சுவீகாரமெடுத்தபின் அவன் என் மகன்தான். சட்டப்படி எனது சகல ஜங்கம, ஸ்தாவர சொத்துக்களுக்கும் அவனேதான் வாரிசு. எனது காலத்திற்குப் பின் எனது சொத்துக்களை அவன் பெறுவதில் ஏதாவது தடை ஏற்படுமா? நான் காலமானபின் எனது சுவீகார மகன் நீதிமன்றத்தின் மூலம் வாரிசுச் சான்றிதழ் பெற வேண்டுமா? றீ.அங்கயற்கண்ணி, திருப்பூர்.

பதில் - 1

பதில் - 1.

உங்கள் காலத்திற்குப் பின்னர் உங்கள் சுவீகார மகன் உங்கள் சொத்துக்களை வாரிசாக அடைய சட்டப்படி தடை ஏதுமில்லை. அதற்காக நீதிமன்றத்தில் சான்றிதழ் பெற வேண்டியதில்லை. 1989 ல் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திரமே போதுமானது. அதற்கு அங்கீகாரம் ஏதுவும் தேவையில்லை. உங்கள் சுவீகாரமே சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று யாராவது ஆட்சேபணை செய்தால் மட்டுமே நீங்கள் நீதிமன்றத்தை அணுகி உங்கள் சுவீகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

கேள்வி - 2

கேள்வி - 2

என்னுடைய தந்தைக்குப் பூர்வீகமாகப் பாத்தியப்பட்டட சுமார் 12 ஏக்கர் நிலமுள்ளது. அவருக்கு மூன்று மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். எனது தாயார் உயிருடன் உள்ளார். எனது தந்தை கடந்த 1994 - ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். அவர் சொத்து குறித்து எந்த ஆவணமும் எழுதி வைக்கவில்லை. எங்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது எனது 2 சகோதரிகளும் பாகம் கேட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் சரியாகப் பங்கு தர வேண்டுமா?


P.பழனிவேல், மேட்டுப்பாளையம்.

 

பதில் - 2

இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் 1989 ம் ஆண்டு பெண்களுக்கும் பூர்வீக சொத்தில் சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்கிற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. அப்படித் திருத்தப்பட்ட சட்டத்தின்படி உங்கள் சொத்தானது ஆறு சம பாகங்களாகப் பிரிக்கப்பட வேண்டும். எனவே உங்கள் சகோதரிகளுக்கும் சரி சமமாகப் பாகம் இருக்க வாய்ப்புள்ளது.

கேள்வி - 3

நான் சென்ற வாரம் ஒரு வங்கியில் பணம் கட்டச் சென்றேன். நான் கொடுத்த ரூ.10,000 ல் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கள்ள நோட்டு என்று கூறி எடுத்து விட்டனர் என்னைப் பலவாறு வங்கியில் விசாரணை செய்துவிட்டு, காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பதாகக் கூறினர். நான் ஒருவாறு அப்பிரச்சினையைச் சமாளித்தேன் உண்மையில் அது கள்ள நோட்டு என்று எனக்குத் தெரியாது. அதை ஏமாற்றி என்னிடம் கொடுத்து விட்டனர். இந்நிலையில் காவல் துறையினரிடம் புகார் செய்திருந்தால் என் நிலை என்ன?

பதில் - 3

கள்ள ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்ததாக ஒருவருக்கு சட்டீஸ்கர் மாநில உயர்நீதி மன்றம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில் உச்சநீதிமன்றமானது ஒருவர் தன்னிடம் இருப்பது கள்ள நோட்டு என்று தெரிந்த பிறகு அதைப் பயன்படுத்த முயன்றால் அது இந்திய தண்டனைச் சட்டம் 489, 489 சி பிரிவுகளின்படி குற்றமெனவும், அது கள்ளநோட்டு என்று தெரியாமல் வைத்திருந்தால் குற்றமாகாது என்றும் கூறி உயர்நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்தது. பொதுவாகக் குறைந்த எண்ணிக்கையில் கள்ள நோட்டுக்களை ஒரு நபரிடம் இருந்து கைப்பற்றும்போது காவல் துறையினர் அந்த நபரின் பின்னணியை அலசிப் பார்த்து அந்த நோட்டுக்களைக் கள்ள நோட்டுக்கள் என அவர் தெரியாமல் வைத்திருந்தார் என நம்பினால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அந்த நோட்டுக்களைக் கிழித்து எறிந்து விடுவார்கள்.

கேள்வி - 4

ஒரு நபர் பிறவியிலேயே ஊனம் மற்றும் செவிடு. அத்தகைய நபர் ஒரு குற்றம் செய்தால் , அவரைக் கைது செய்ய இயலாது என்கிறார்கள். அது சரியா?

பதில் - 4

பிறவியிலேயே ஊனமாகவும், செவிடாகவும் உள்ள ஒரு நபர் குற்றம் செய்தாலும், இடையில் அவருக்கு அத்தகைய ஊனம் ஏற்பட்டிருந்தாலும், அவர் செய்த குற்றச் செயலுக்காக அவரைக் கைதுசெய்து வழக்கு தெடர இயலும். ஆனால் நீதிமன்ற விசாரணை மட்டும் அத்தகைய குறைபாடுடைய நபரைப் பொறுத்தளவில் சிறிது மாறுபாடு உடையதாக இருக்கும். அவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய சைகை மொழி பேசும் ஒருவரை மொழி, பெயர்ப்பாளராக வைத்து வழக்கு நடத்தப்படும். அப்படி இல்லையயனில் அத்தகைய நபர் வழக்கு நடத்தி அவர் குற்றவாளி எனத்தீர்மானிக்கலாம். ஆனால் அவருக்குத் தண்டனை அளிக்க இயலாது. அந்த வழக்கை நடத்திய நீதிபதி வழக்கின் அனைத்து ஆவணங்களையும் உயர்நீதி மன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். உயர் நீதிமன்றம் தண்டனை அளிப்பது குறித்து முடிவு செய்யும்.

கேள்வி -1

நான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து  விளை பொருட்களை வாங்கி எனது கடையில் விற்பதுடன் மற்ற கடைகளுக்கும் விநியோகிக்க யோசனை செய்துள்ளேன்.  மத்திய அல்லது மாநில அரசுகளிடமிருந்து இயற்கைப் பொருட்களுக்கு வரிச் சலுகை ஏதாவது அறிமுகப்படுத்தியுள்ளதா? அல்லது வரிச்சுமை செலுத்த வேண்டியுள்ளதா?

பதில் - 1

இதை வியாபாரமாக அரசு கருதுவதனால் தற்போதைக்கு வரிச்சலுகைகள் இல்லை,இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைப்பது உசிதம்.

கேள்வி - 2

நான் மத்திய அரசின் Tender ஒன்றுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன் அந்த Tenderல் நான் தேர்வு செய்யப்பட்டால் Bank Guarantee அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த Bank Guaranteeஅளிக்க நான்  என்ன செய்ய வேண்டும்?

பதில் - 2

பேங்க் கியாரண்டி இரண்டு வகையாகும்

     1.தேவையான தொகைக்கு வங்கியில் வைப்பு நிதி (fixed deposit) துவங்கி அதன் அடிப்படையில் பேங்க் கியாரண்டி              பெற்றுக் கொள்ளலாம்.

  1. நமது ஏதேனும் சொத்தை அடமானமாக கொடுத்து வங்கி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பெறலாம்.

கேள்வி - 3

ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று எனக்குத் திருப்பித்தர வேண்டிய தொகையை இன்னும் (கால அவகாசம் முடிந்த பின்னரும்) செலுத்தவில்லை. இருப்பினும் அவர்கள் தங்களது விற்பனைக்கு வெளிநாட்டில் இருந்து தொகைகளைத் தாமதமின்றி பெறுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.  எனது தொகையைப் பெற வங்கியில் அல்லது வேறு அரசுத்துறை அலுவலகத்தில்  பெற முடியுமா?

பதில் -3

உங்களது பாக்கித் தொகையை வசூலிக்க நீதிமன்றத்தை அணுகி மேற்கூரிய தகவல்களை அளித்து நிவாரணம் பெறலாம்.  

கேள்வி - 4

பிளான்டேசன் பயிர் விவசாய வருமானத்திற்கு வரி உண்டு என்று எனக்கு ஓர் செய்தி கிடைத்துள்ளது.  இது உண்மையா?

பதில் - 4

உண்மை,ஆனால் அதில் ஈட்டும் வருவாயில் 60% விவசாய வருமானமாகவும்(வரி இல்லை)  மீதியுள்ள 40% வியாபார வருமானமாகவும் (வரி உண்டு) கருதப்படும்.