விலை ரூ.25/-

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

மின் புத்தகங்கள்

  • இயற்கை பண்ணையம்

  • ஒருங்கிணைந்த பண்ணையம்

கேள்வி பதில்கள்

கேள்வி - 1

எனக்கு வியாபாரம் நிமித்தமாக ஒருவர் காசோலை ஒன்றினை வழங்கினார்.  அந்தக் காசோலையை வங்கியில் போட‘Refer to the Drawer ’ எனத் திரும்பியுள்ளது. ‘Insufficient of Funds’ எனத் திரும்பி வந்தால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?

-கனகராஜ், திருப்பூர்

பதில் - 1

ஒரு காசோலையைப் பல்வேறு காரணங்களுக்காக ஒரு வங்கியால் திருப்பி அனுப்ப இயலும்.  அந்தக் காரணங்களில் ‘Refer to the Drawer’ எனவும், பெரும்பாலும் திருப்பி அனுப்பட்பட்டு வந்தது, தற்போது என்ன காரணத்தால் காசோலை திருப்பி அனுப்பப்படுகிறது என்பதை வங்கிகள் ‘Return Memo’ ல் தெளிவாகக் குறிப்பிட வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘Refer to the Drawer ’ என்று இருந்தாலும்  வழக்குத் தொடர இயலும்.

கேள்வி - 2

நான் இந்து. என் மனைவி என் மீது விவாகரத்து மனு செய்திருக்கிறார்.  எனது மனைவிக்குத் தனிப்பட்ட வருமானம் உண்டு.  எனக்கு எவ்வித வருமானமும் இல்லை.  நான் எனக்கு இடைக்கால ஜீவனாம்சமும், கோர்ட்  நடவடிக்கை செலவுக்கும் என் மனைவிதான் தரவேண்டும் என இடைக்கால மனுதாக்கல் செய்ய உரிமையுள்ளதா?

நாதன், காரமடை

பதில் - 2

தாங்கள் வியாபார நிமித்தமாக பராமரித்து வரும் கணக்குகளின் அடிப்படையில் உங்களுக்கு வரவேண்டிய ரூ.1,27,500 க்காக நீங்கள் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து பணத்தை வசூல் செய்யலாம்.  அல்லது காசோலை குறித்த மாற்று ஆவணச் சட்டப்படியும் (Negotiable Instruments Act) நடவடிக்கை எடுக்க இயலும்.  காசோலையில் நிரப்பப்ட்டுள்ள தொகை, கடன் தொகையைக் காட்டிலும் அதிகம் இருந்தாலும், உங்களக்கு வர வேண்டிய தொகையை மட்டும் நீங்கள் அனுப்ப வேண்டிய அறிவிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டு, அதனை மட்டும் அதாவது 1,27,500 மட்டும் அறிவிப்புக் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் செலுத்தும்படி அறிவிப்பு அனுப்ப வேண்டும்.  அந்தக் குறிப்பிட்ட நாளில் பணம் செலுத்தவில்லையனில், நீங்கள் குற்றவியல் நீதிமன்றத்தில் காசோலை குறித்த மாற்று ஆவணச் சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கலாம்.

கேள்வி - 3

நான் மற்றும் எனது நண்பர்கள் மூவர் கூட்டாக ஒரு வியாபார நிறுவனம் நடத்தி வந்தோம். அதில் பங்குதாரர் இருவருக்குக் காசோலை அதிகாரம் (Cheque power) கொடுத்திருந்தோம்.  நானும் இன்னொருவரும் நிறுவனத்தில் பெயரளவில் பங்குதாரர்களாக இருந்தோம்.  வியாபாரச் செயல்பாடுகள் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.  எங்களது நிறுவனத்தில் நிர்வாகப் பங்குதாரராக இருந்த இருவரும் நிறுவனக் காசோலைகளைக் கொடுத்து பல இடங்களில் பணம் பெற்றுள்ளனர்.  இப்போது நாங்கள் வியாபார நிறுவனத்தை மூடிவிட்டோம்.  என் பங்குதாரர்கள் கொடுத்த எங்கள் நிறுவனக் காசோலைகளை வைத்துப் பணம் கொடுத்தவர்கள் மீது கிரினில் வழக்கு தொடுப்பதாகக் கூறி வருகின்றனர்.  நாங்கள் எங்கள் நிறுவனத்தை நிர்வகித்து வந்த பங்குதாரர்களைக் கேட்ட போது பணத்தை செட்டில் செய்து விடுவதாகக் கூறுகின்றனர். நிறுவனத்தில் எந்தப் பொறுப்பிலும் இல்லாத எங்கள் மீது பணம் கொடுத்தவர்கள் நடவடிக்கை எடுக்க முடியுமா?

காளிதாஸ், பொள்ளாச்சி

பதில் - 3

தங்களுடைய கூட்டாண்மை நிறுவனத்தில் பங்குதாரர்கள் பெற்றிருந்த கடனைத் தாங்களும் சேர்த்துதான் அடைக்க வேண்டும்.  பணம் செலுத்துகிற பொறப்பினைத் தாங்கள் சட்டப்படி தவிர்க்க இயலாது.  அதற்குப் பணம் கொடுத்தவர்கள் சிவில் நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். காசோலையைப் பொறுத்த அளவில் நிறுவனத்தின் அன்றாட நிகழ்வுகளில் (Day to day affairs) பங்கு கொள்கிற பங்குதாரர்கள் மற்றும் காசோலை வழங்கும் அதிகாரம் பெற்று அதனடிப்படையில் காசோலைகளில் கையயாப்பம் செய்திருக்கிற நபர்கள் மீதுதான் வழக்குத் தொடர முடியும்.  அப்படி உங்களையும் வழக்கில் எதிரியாகச் சேர்க்கும் பட்சத்தில் நீதிமன்றத்தில் அந்தக் கூட்டாண்மை நிறுவனத்தில் உங்கள் பொறுப்புக்களைக் கூறி மனுத்தாக்கல் செய்து வழக்கிலிருந்து உங்களை நீக்கிக் கொள்ள இயலும்.

கேள்வி -1

நான் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து  விளை பொருட்களை வாங்கி எனது கடையில் விற்பதுடன் மற்ற கடைகளுக்கும் விநியோகிக்க யோசனை செய்துள்ளேன்.  மத்திய அல்லது மாநில அரசுகளிடமிருந்து இயற்கைப் பொருட்களுக்கு வரிச் சலுகை ஏதாவது அறிமுகப்படுத்தியுள்ளதா? அல்லது வரிச்சுமை செலுத்த வேண்டியுள்ளதா?

பதில் - 1

இதை வியாபாரமாக அரசு கருதுவதனால் தற்போதைக்கு வரிச்சலுகைகள் இல்லை,இருப்பினும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குக் கோரிக்கை வைப்பது உசிதம்.

கேள்வி - 2

நான் மத்திய அரசின் Tender ஒன்றுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன் அந்த Tenderல் நான் தேர்வு செய்யப்பட்டால் Bank Guarantee அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த Bank Guaranteeஅளிக்க நான்  என்ன செய்ய வேண்டும்?

பதில் - 2

பேங்க் கியாரண்டி இரண்டு வகையாகும்

     1.தேவையான தொகைக்கு வங்கியில் வைப்பு நிதி (fixed deposit) துவங்கி அதன் அடிப்படையில் பேங்க் கியாரண்டி              பெற்றுக் கொள்ளலாம்.

  1. நமது ஏதேனும் சொத்தை அடமானமாக கொடுத்து வங்கி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பெறலாம்.

கேள்வி - 3

ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று எனக்குத் திருப்பித்தர வேண்டிய தொகையை இன்னும் (கால அவகாசம் முடிந்த பின்னரும்) செலுத்தவில்லை. இருப்பினும் அவர்கள் தங்களது விற்பனைக்கு வெளிநாட்டில் இருந்து தொகைகளைத் தாமதமின்றி பெறுவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது.  எனது தொகையைப் பெற வங்கியில் அல்லது வேறு அரசுத்துறை அலுவலகத்தில்  பெற முடியுமா?

பதில் -3

உங்களது பாக்கித் தொகையை வசூலிக்க நீதிமன்றத்தை அணுகி மேற்கூரிய தகவல்களை அளித்து நிவாரணம் பெறலாம்.  

கேள்வி - 4

பிளான்டேசன் பயிர் விவசாய வருமானத்திற்கு வரி உண்டு என்று எனக்கு ஓர் செய்தி கிடைத்துள்ளது.  இது உண்மையா?

பதில் - 4

உண்மை,ஆனால் அதில் ஈட்டும் வருவாயில் 60% விவசாய வருமானமாகவும்(வரி இல்லை)  மீதியுள்ள 40% வியாபார வருமானமாகவும் (வரி உண்டு) கருதப்படும்.