விலை ரூ.20/-

விலை ரூ.20/-

விலை ரூ.20/-

விலை ரூ.20/-

விலை ரூ.20/-

விலை ரூ.20/-

மின் புத்தகங்கள்

  • இயற்கை பண்ணையம்

  • ஒருங்கிணைந்த பண்ணையம்

கேள்வி பதில்கள்

கேள்வி - 1

நான் வாடகைக் கட்டிடத்தில் கடை வைத்து மோட்டார் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்து வருகிறேன்.  மாத வாடகை ரூ.2000, அட்வான்ஸ் ரூ.20,000.  நான் கடை வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.  இன்றுவரை சரியாக 10ம் தேதி வாடகையை வீட்டுக்காரரிடம் கொடுத்து விடுகிறேன்.  கடந்த ஒரு மாதமாக என்னிடம் அதிக வாடகை கேட்டு தொந்தரவு செய்கிறார்.  என்னைக் காலி செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்.  நான் காலி செய்தாலும் வேறு இடம் பார்க்கக் கால அவகாசம் வேண்டும் .  எனக்கு இது பற்றி ஆலோசனை தேவை.

V.மனோகரன், கணபதி, கோவை - 6

பதில் - 1

தங்களுடைய கடிதத்தில் வாடகை அட்வான்ஸ் ஆகியவற்றிற்கு ரசீது உள்ளதா? எனக்குறிப்பிடவில்லை.  இருப்பினும் தாங்கள் அங்கு கடை நடத்தி வருவதற்கான ஆதாரங்கள் இருப்பின் சிவில் நீதிமன்றத்தின் மூலம் உங்களை உடனடியாகக் காலி செய்யக் கூடாது என உறுத்துக் கட்டளை (Injunction) கோரி வழக்குத் தொடரலாம்.  வீட்டு உரிமையாளர் வாடகைக் கட்டுப்பாடு சட்டப்படி மட்டுமே வாடகைதாரரைக் காலி செய்ய முடியும்.

கேள்வி - 2

நான் இந்து. என் மனைவி என் மீது விவாகரத்து மனு செய்திருக்கிறார்.  எனது மனைவிக்குத் தனிப்பட்ட வருமானம் உண்டு.  எனக்கு எவ்வித வருமானமும் இல்லை.  நான் எனக்கு இடைக்கால ஜீவனாம்சமும், கோர்ட்  நடவடிக்கை செலவுக்கும் என் மனைவிதான் தரவேண்டும் என இடைக்கால மனுதாக்கல் செய்ய உரிமையுள்ளதா?

நாதன், காரமடை

பதில் - 2

உங்களுக்கு அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க எவ்வித தனிப்பட்ட வருமானமோ அல்லது சொத்தோ இல்லை என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும்.  பிறகு உங்கள் மனைவி சுயமாகத் தனிப்பட்ட வருமானம் உடையவராக இருந்தால், இந்து திருமணச்சட்டம், பிரிவு 21ன் படி இடைக்கால  மனு  தாக்கல்  செய்யலாம்.  அதற்கான உரிமை உண்டு.

கேள்வி - 3

எனக்கு ஒருவர் அவருக்குச் சொந்தமான சொத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார்.  அவர் கிரையம் செய்து கொடுத்து சுமார் ஒரு வருடம் ஆகிறது. தற்போது என்னுடைய கிரையத்திற்கு முன்னரே எனக்கு விற்ற சொத்தை இன்னொரு நபருக்குக் கிரைய ஒப்பந்தம் போட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.  அப்படிப்பட்ட கிரைய ஒப்பந்தம் செல்லுமா?

-.அன்சாரி, கோவை

பதில் - 3

ஒரு சொத்தைக் குறித்து, கிரைய ஒப்பந்தம் போட்டிருந்தாலும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய இயலும்.  இருந்தாலும் கிரைய ஒப்பந்தம் போட்டவர் நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளது.

கேள்வி - 4

எனது தகப்பனார் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார். அவரது இறப்பை நாங்கள் பஞ்சாயத்து அலுவலகத்தில் பதிவு செய்யத் தவறிவிட்டோம்.  இப்போது பல காரணங்களுக்காக எனது தந்தையாரின் இறப்புச் சான்றிதழ் தேவைப்படுகிறது.  பல ஆண்டுகள் கழித்து இவரது இறப்பைப் பஞ்சாயத்து யூனியனில் பதிவு செய்ய முடியாது என்கிறார்கள். எவ்வாறு இறப்புச் சான்றிதழ் பெறுவது?

V.ராமகிருஷ்ணன், சூலூர்.

பதில் - 4

ஒருவர் இறந்தால் முப்பது நாட்களுக்குள் பிறப்பு இறப்பு அலுவலகத்திற்குத் தகவல் தர வேண்டும்.  அப்படித் தவறும் பட்சத்தில், ஒருவருடம் வரை காலதாமதக் கட்டணத்தோடு பதிவு செய்து கொள்ளலாம்.  தங்கள் தந்தையார் இறந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டபடியால், தாங்கள் வசிக்கும் பகுதியின் வரம்பிற்குட்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து உங்கள் தந்தையாரின் இறப்பைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற இயலும்.

கேள்வி - 5

எனக்கும் எனது சகோரருக்கும் பாகபிரிவினை சம்பந்தமாக ஒரு வழக்கு நடந்து வருகிறது.  இந்நிலையில், எனது தம்பி பிரிக்கப்டாத சொத்தினை விற்க முயன்று வருகிறார்.  ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது ஒருவர் சொத்தினை விற்றால் அந்த விற்பனை சட்டப்படி செல்லத்தக்கதாகுமா?

S.பாலமுருகன், பொள்ளாச்சி.

பதில் - 5

ஒரு சொத்து குறித்து பாகப்பிரிவினை வழக்கு நிலுவையில் இருந்தாலும் பொதுவில் பாதி அல்லது எனக்கு வரக்கூடிய பாகம் எனக்குறிப்பிட்டு விற்க இயலும்.  வழக்கின் தன்மையைப் பொறுத்து பாகம் வருவது மட்டும் வாங்கியவர்களுக்குச் சொந்தமாகும்.  எனவே வழக்கு நிலுவையில் உள்ள போது செய்யப்பட்ட சொத்துரிமை மாற்றம் சட்டப்படி செல்லத்தக்க ஒன்றாகும்.

கேள்வி -1

நான் ஒரு பார்ட்னர்´ப் கம்பெனியில் பார்ட்னர் ஆக இருந்தேன்.  நான் 20 வருடத்திற்கு மேலாக அதில் ஒரு சில நிர்வாகப் பொறுப்புகளையும் செய்து வந்துள்ளேன்.  என் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது விலக வேண்டியதாயிற்று.  நான் வேலை செய்ததற்கு எந்த சம்பளமும் பெறவில்லை.  என்னுடைய உழைப்பினால் பல ஆர்டர்கள் பெற்றுக் கொடுத்துள்ளேன்.  நான் என் வேலைக்காக ஊதியம் அல்லது எழுத்துப்பூர்வமாக அந்த நிறுவனத்திடம் பெற முடியுமா?

பதில் - 1

தாங்கள் செய்த வேலைகளுக்கும், நிர்வாக திறன் அமைப்பிற்கும் தகுந்த ஊதியம் என்னும் அடிப்படையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எழுத்துப்பூர்வமாக) செய்யப்பட்டிருந்தால் மட்டுமே செல்லத்தக்கதாகும்.

கேள்வி - 2

என் மகன் வெளி நாட்டில் வேலை செய்கிறான்.  அவன் சம்பளப் பணத்தை இந்தியாவில் வங்கிக் கணக்கில் அந்நிறுவனம் செலுத்துகின்றது.  அந்த வங்கிக் கணக்கில் உள்ள பணத்திற்கு கிடைக்கும் வட்டித் தொகைக்கு வரி எப்படி வரும்?

பதில் - 2

வட்டி வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டும்.  வரி கழித்தல் என்பது Sec 80 TTA கீழ் ரூபாய் 10,000/- வரை செய்து கொள்ள முடியும்.

கேள்வி - 3

Wealth  tax வரி உண்டா?

பதில் -3

வரி உண்டு.  சொத்தின் மதிப்பு ரூபாய் 30,00,000/- மேல் இருப்பின் 1% வரி செலுத்த வேண்டும்.

கேள்வி - 4

நான் ஒரு உணவகத்தில் வேலை செய்கிறேன் தண்ணீர் சூடு செய்வதற்கு கருவியை வைத்துள்ளோம்.  மேலும் சமீபத்தில் உள்ள மின் தட்டுப்பாட்டினால் Solar (சூரிய சக்தி) மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கருவியை பொறுத்த திட்டமிட்டு வருகிறோம்.  இவ்விரண்டிற்கும் ஒரே விகித தேய்மானம் (Depreciation) எடுத்துக்கொள்ள முடியுமா?

பதில் - 4

சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி கருவி மற்றும் இயந்திரங்களுக்கு 80% தேய்மான விகிதமாக இந்திய வருமான வரிச் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ளது.

YouTube Video Feed