KMCH மருத்துவ மனையில் முதன் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

kmch+logoதமிழகத்தில் (சென்னை நீங்கலாக) முதன் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சாதனை…கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் மருத்துவர் குழு ஒன்று, கல்லீரல் நோய் மருத்துவ  நிபுணர் ம்r.ஒளித் செல்வன் மற்றும் கல்லீரல் அறுவை சிகிச்சை வல்லுனர் Dr.மேக்னஸ் ஜெயராஜ் மன்சார்டு அவர்களின் தலைமையில் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சையினை முதன்முதலாக வெற்றிகரமாக கடந்த புதன்கிழமை (02.07.2014) அன்று செய்து சாதனை படைத்தது.  சவால் மிகுந்ததும் மிகவும் சிக்கலானதுமான இந்தக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, கல்லீரல் நோயால் அவதியுற்று வந்த டெல்லியைச் சேர்ந்த 49 வயது நபருக்குச் செய்யப்பட்டது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குத் தேவைப்பட்ட கல்லீரலை, சாலை விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு ஏற்பட்ட திருச்சியைச் சார்ந்த ஒரு நபரின் உடலில் இருந்து தானமாக, அவர் குடும்பத்தின் இசைவுடன் பெறப்பட்டது.  இதற்காக KMCH மருத்துவக்குழு ஒன்று திருச்சிக்கு விரைந்து சென்று மூளைச்சாவு ஏற்பட்டவரின் உடலில் இருந்து கல்லீரலை எடுத்து கோவைக்குக் கொண்டு வந்தது.  காரணம் அறியப்படாத முற்றிய இறுதிகட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்த டெல்லியைச் சார்ந்த ஒருவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரல் பொருத்தப்பட்டது.  இந்தக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரல் பொருத்தப்பட்டது.  இந்தக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையானது 8 மணி நேரம் நடந்தது.

இந்த அறுவை சிகிச்சையை, குடல் அறுவை சிகிச்சை மருத்துவர், கல்லீரல் அறுவை சிகிச்சை வல்லுனர் மற்றும் மயக்கமருந்து மருத்துவர் ஆகியோர் அடங்கிய மருத்துவக்குழு மேற்படி நோயாளியின் நிலைமையைக் கண்காணித்து வந்தது.  அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் அவர் வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இரு வாரங்கள் கழிந்த பின்பு நோயாளி மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவார்.  முதல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை 1963 ம் ஆண்டு  Dr.ஸ்டார்ஸ் என்பவரால் அமெரிக்காவில் செய்யப்பட்டது.  பின்னர் 30ஆண்டுகள் கழித்து இந்தியாவிலும் 1998 ல் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

முற்றிய கல்லீரல் நோயால் வருந்தும் நோயாளிகளுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் ஒன்றாகும்.  கல்லீரல் நோய் முற்றும் போது கல்லீரல் கடினப்பட்டு சுருங்கிப் போகிறது.  இதன் காரணமாகக் கல்லீரல் இயங்க முடியாமல் செயலற்றுப் போகிறது.  மருத்துவ ரீதியான (மருந்துகள் மூலம்) சிகிச்சை பலன் அளிக்காத பட்சத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வாக அமைகிறது.

அளவுக்கு அதிகமாக மது அருந்துவதாலும் ஹப்படிடிஸ் B மற்றும் Cகிருமிகளால் தாக்கப்படுவதாலும் கல்லீரல் நோய் உண்டாகிறது.  நீண்ட காலமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கும் உடல் பருமன் உள்ளவர்களுக்கம் இந்த நோய் வருவதுண்டு.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை இரண்டு வகைப்படும்.  மூளைச்சாவு ஏற்பட்டவர்களின் உடல்களிலிருந்து தானமாகப் பெறப்பட்ட கல்லீரலை எடுத்துப் பொருத்துவது ஒன்று.  இதற்கு மூளைச்சாவு நிகழ்ந்த நபரின் குடும்பத்தாரின் சம்மதம் பெற்றாக வேண்டும்.  இன்னொன்று உயிருடன் இருப்பவர்கள் தானாகவே தானமாக கொடுப்பதை ஏற்றுச் செய்வது.  உயிருடன் இருப்பவர்கள் தங்கள் உற்றார்/உறவினருக்காகத் தாமாகவே முன்வந்து தன் கல்லீரலில் ஒரு பகுதியைத் தானமாகக் கொடுப்பதைப் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

இறந்த நபர்களின் உடல்களிலிருந்து பெறப்பட்ட கல்லீரலை எடுத்து கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் போது, நோயாளியின் உடலிலிருந்து பாதிக்கப்பட்ட கல்லீரல் முழுவதும் அகற்றப்படுகிறது.  உயிருடன் இருப்பர்களிடமிருந்து எடுக்கப்பட்ட கல்லீரலின் ஒரு பகுதியை நோயாளியின் பாதிக்கப்படாத கல்லீரலுடன் பொருத்தப்பட்ட பின்னர் 6 வாரங்கள் கழித்து அந்த கல்லீரல் பழைய நிலைமைக்கு வந்துவிடுவது மட்டுமில்லாமல் இயல்பாகவும் செயல்படத் தொடங்குகிறது.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை முற்றிய, இறுதிகட்ட கல்லீரல் நோயால் வருந்துவோர்களுக்கும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டோருக்கும் செய்யப்படுகிறது.

ஒரு நபரின் ஆரோக்கியமான கல்லீரலை ஹப்படிடிஸ் A மற்றும்B வைரஸ்களால் தாக்கப்படும்போது அவருடைய கல்லீரல் திடீரென செயலிழந்துவிடுகிறது.  மேலும் சில மருந்துகளை உட்கொள்வதாலும் கல்லீரல் நோய் ஏற்படுகிறது.கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகளில் 90% வெற்றி ஏற்படுகிறது.  ஒரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவாகிறது.  முதலமைச்சரின் விரிவான உடல் நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது.கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த ம்r.ஒளித் செல்வன் ஜிப்மர் மருதுவமனையில் னிம் பட்டம் பெற்று லீட்ஸ் நகரத்தில் உள்ள புனித ஜேம்ஸ் பல்கலைகழகத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதில் சிறந்த பயிற்சி பெற்றுள்ளார்.  இந்தத் துறையில் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ள ம்r.ஒளித் செல்வன் இங்கிலாந்தில் உள்ள பல புகழ் பெற்ற மருத்துவமனைகளில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் Dr.நல்ல பழனிசாமி கூறியதாவது: இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் செய்யப்பட்டு வந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் வசதி தற்போது கோவையிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் கோவை நகர மக்களும் மேற்குத் தமிழ்நாட்டில் உள்ளவர்களும் பயன் பெறுவார்கள். KMCH மருத்துவமனையில் நல்ல கல்வித் தகுதியும் சிறந்த பயிற்சியும் பெற்ற மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறவை சிகிச்சை செய்கின்றனர்.

KMCH மருத்துவமனை கல்லீரல் நோய் துறை வழங்கும் சேவைகள்:

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குத் தனிப்பிரிவு
முற்றிய இறுதிகட்ட கல்லீரல் நோய் மற்றும் செயலிழந்த கல்லீரல் உள்ளோருக்கான தீவிர கல்லீரல் சிகிச்சைப் பிரிவு (ICU)

கல்லீரல் டயாலிசிஸ்

மஞ்சள் காமாலை, ஹப்படிடிஸ் A மற்றும் B , மது அருந்துவதால் கெட்டுப்போன கல்லீரல் மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஆகியவற்றைத் திறமையாகக் கையாள்வதற்கான சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட விஷேச பிரிவு.