START UP INDIA STAND UP INDIA

6434qjx2புதிய தொழில் துவங்க முனைபவர்கள் இனி மகிழ்ச்சி கொள்ளலாம்.  நிறைய செய்முறைகள், படிவங்கள் , மற்றும் பல இன்னல்கள் உண்டு ஓர் புதிய தொழில் துவங்குவதில் எவ்வளவு சிரமம்  என்று பலர் சொல்ல கேட்டுள்ளோம்.  சிங்கப்பூரில் ஒரே நாளில் தொழில் துவங்கலாம், ஆனால் இந்தியாவில் குறைந்த பட்சம் 3 மாதம் ஆகிறது என்கிறார் ஒருவர். புதிய திட்டத்தின் அம்சங்கள் அறிவித்த நமது பிரதமர் அவர்கள் “நான் டீ கடை நடத்திய போது ஏன் ஓர் ஒட்டல் நறுவனத்தை துவங்குவதைப் பற்றி யோசிக்கவில்லை?” என்ற கேள்வியிலே அவர் அதில் உள்ள இன்னல்களை நன்றாகப் புரிந்துள்ளார் என்பதற்கு சான்று.  சர்வ தேச அளவில் இந்தியாவில்தான் தொழில் துவங்குவோர் எண்ணிக்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.  இனி வரும் காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளின் மையமாகத் திகழ வேண்டும் என்பதே மத்திய அரசின் நீண்ட நாள் இலக்கு.  பல வருடங்களாகத் தொழில் நுட்பத்தின் முக்கியத்துவத்திற்குப் போதிய அங்கீகாரம் இல்லாததன் காரணமாக நம் நாட்டின் புதிய கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை குறைவுதான்.  தொழிலதிபர்கள் பலர் நம் நாட்டின் தொழில்துறைக்குப் புத்துயிர் ஊட்ட வந்துள்ளதை இந்த ‘STARTUP INDIA’ திட்டம் என்கிறார்கள்.  இதன் மூலம் வேலைவாய்ப்புகள், புதிய கண்டுபிடிப்புகளுக்குக் கிடைக்க இருக்கும் ராயல்டி (ROYALTY) போன்றவை நல்ல வளர்ச்சி, புதிய வேலை வாய்ப்புகள்  தரும் என்பதில் ஐயமில்லை.

1. முதலீடு செய்ய, விற்ற சொத்தின் மீது CAPITAL GAIN வரி கிடையாது.

அதாவது, எந்த தொழிலுக்கும் முதலீடு முக்கியம்.  எல்லோருக்கும் போதிய பணம் இருப்பதில்லை.  ஆகையால் அந்தத் தொழில் துவங்கத் தேவைப்படும் முதலீட்டுத் தொகையை, சொத்துகளை விற்றும், கடன் வாங்கியும், வென்சர் கேப்பிடல் போன்ற வழிகளில்  திரட்டுகின்றனர்.  தற்போது உள்ள வருமான வரிச் சட்டத்தில் ஓர் அசையாச் சொத்தை விற்கும் போது அதற்கு CAPITAL GAIN வரி செலுத்த வேண்டும் (நீண்டகாலம் – (20% 3 ஆண்டுக்கு மேல் ) குறுகிய காலம் ( 3 ஆண்டுக்குள் – 30% ) ஆக உள்ளது.  உதாரணமாக இந்த வரியிலிருந்து விடுபடும் போது ரூ.10 லட்சம் லாபத்தில் ரூ.2 லட்சம் கட்ட வேண்டிய நிலையிலிருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2 லட்சம் கூடுதலாகக் கிடைக்கும்.. மேலும் அந்த ரூ.2 லட்சம் கடனாகப் பெற வேண்டிய அவசியமும் இல்லை, ஆக வட்டியும் இல்லை.

2. முதல் மூன்று வருடத்திற்கு வருமான வரி கிடையாது.

புதிதாகத் தொழில் துவங்குவோர்களுக்கு முதல் மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி கிடையாது.  பொதுவாக முதல் மூன்று ஆண்டுகளில் லாபம் ஈட்டுவது ஒரு சில  நிறவனங்கள் மட்டுமே.  ஏதாவது ஒருசில நிறுவனங்கள் மட்டுமே ஆரம்பத்தில் லாபம் ஈட்டுகின்றன. இதனால், தொழில் துவங்குவோரை ஊக்குவிக்கவே இந்தச் சலுகை. இந்த லாபத்திலேயே முதலீட்டில் ஒரு பங்கோ அல்லது முழுமையாகக் கூடத் திரும்பப் பெறும் வாய்ப்பு உள்ளது.

3. சான்றிதழ்களைத் தானே உறுதிப்படுத்துவது (SELF ATTESTATION).

நாம் அரசுத்துறை அலுவலகங்களில் GAZETTED OFFICER கையழுத்து தேவை என்று அலைந்து திரிந்த காலம் போய் நம் சான்றிதழ்களை நாமே உறுதிபடுத்த நமது கையழுத்தைப் போட்டாலே போதுமானது.  இதன் மூலம் அரசு விண்ணப்பதாரர் மேல் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது.  மேலும் காலம் தாழ்த்தாமல் வேலையை முடிக்கவே இந்த முடிவு. அளித்த சான்றிதழ் சரியில்லை என்றால் அசல் ஆவணங்களைத் தேவைப்படும் போது காண்பித்தால் மட்டுமே அந்த அரசு அனுமதியோ சலுகையோ கிடைக்கும். DIGITAL LOCKER.IN என்பதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம். இதில் நம் முக்கிய ஆவணங்களைப் பதிவு செய்தால், அதன் (DIGITAL LOCKER) ன் எண்ணைக் கொடுத்தாலே போதுமானது. டிஜிட்டல் லாக்கர் திட்டம் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஓர் முக்கிய அம்சமாகும்.

4. STARTUP களுக்கு முதன் மூன்று ஆண்டுகளுக்கு (NO INSPECTION FOR STARTUPS)

தொழில் துவங்குவோருக்கு அதிகப்படியான இன்னல்கள் ஆய்வுகளினால்தான் வருகிறது என்பது ஒரு பொதுவான கருத்து. இதில் சிக்கித் தவிக்கும் நிறுவனங்கள் பல.  துவங்கிய மூன்று ஆண்டுகளுக்கு ஆய்வுகள் கிடையாது என்பது, அவர்கள் அதற்கான அவசியத்தை உருவாக்க மாட்டார்கள் என்பது பொருள்.  இதனால் ஏற்கவே தொழில் தொடர்ந்து நடத்துவோர் ஆட்சேபணம் தெரிவிக்கலாம், ஆனாலும் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கவே இந்தச் சலுகை என்று தெரிகிறது.

5. STARTUPHUB தொழில் துவங்குவோர்களுக்குத் தேவையான தகவல்களுக்கு வழிகாட்டுதலும் அளிக்க ஓர் தலைமை மற்றும் முதன்மை நிலையமாக இருக்கும்.

தொழில் தொடங்கும் முன் பல கேள்விகள் நிச்சயம் நம் எல்லோருக்கும் இருக்கும், மேலும் தொடங்கிய பின்னரும் பல இருக்கும், இவற்றைக் கவனிக்கவே மத்திய அரசின் இந்த நிலையம் உண்டு.  கைபேசி, தொலைபேசி, மின் அஞ்சல், குறுஞ்செய்தி, பேஸ்புக்,  டிவிட்டர், மற்றும் நேரிலும் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். பொதுவாகக் காப்புரிமை, நுகர்வோர் சட்டம் போன்றவற்றின் விளக்கங்கள் கூட அளிக்கப்படும்.  ஏற்றுமதி செய்ய என்ன வழிமுறைகளைக்  கையாள வேண்டும் என்றும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.  நிறைய கேள்விகளுக்கு தக்க நேரத்தில் உரிய பதில்கள் பெற்றாலே வளர்ச்சியும் லாபத்தையும் விரைவில் காணலாம்.

6.PATENTS மற்றும் காப்புரிமை பெறுவது எளிதாக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் தொழில் துவங்கும் முன்னோ அல்லது துவங்கிய பின் இருந்தாலும் அதைக் காப்புரிமை பதிவு செய்தால் நல்லது என்பதை நம்மில் நம் ஒருசிலர் அறிவோம். அதில் அதை செய்வது எவ்வளவு கடினம் என்பது செய்தவர்கள் மட்டுமே நன்கு அறிவார்கள்.  எல்லோரும் எளிதாக பதிவு செய்ய வழிவகுக்கப்பட்டுள்ளது இந்தப் புதிய ‘STARTUP INDIA’ திட்டத்தில்

7. 80 % மானியம் – காப்புரிமை விண்ணப் கட்டணத்தில் காப்புரிமைக்காக கட்டணத் தொகையில் 20% செலுத்தினால் மட்டுமே போதும்.

விண்ணப்பதாரர்கள் மீதியுள்ள 80% தொகையை மத்திய அரசே ஏற்றுக் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளுக்கு நல்ல ஆதரவு அளிக்கின்றது.  இதனால் நிறைய காப்புரிமம் பெற்று நீண்ட காலத்தில் புதிய தொழில்கள் உருவாகும்.  மேலும் கூடுதல் ஆராய்ச்சிக்கும் தேவையான முதலீடும் ராயல்டி  (ROYALTY) மூலம் கிடைக்க வாய்புள்ளது.

8. ஸ்மார்ட் போன் ஆப்

விண்ணப்பங்களை ஸ்மார்ட் போன் ஆப் (APPS) மூலமே பதிவு செய்யலாம்.  தொழில் நுட்பத்தை மத்தியஅரசு எந்த அளவு ஆதரிக்கிறது என்பதற்கு இதுவே சான்று.  மேலும்இதனால் லஞ்சம், ஊழலும் வெகுவாகக் குறையும், முடிவெடுக்கும் நேரம் குறையும், உற்பத்தித் திறன் வேகமாக உயரும்.

9. தொழிலை விட்டு வெளியேறும் கொள்கையும், வடிவமைக்கப்படும்.

தொழிலை மூடவோ, விற்கவோ நினைத்தால் அதற்கான கொள்கையையும் எளிதாகவும், பயனுள்ளதாகவும், வலியில்லாததாகவும் அமைய, கொள்கையை நிறுவ ஏற்பாடுகளை மத்திய அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.  தொழிலை விட்டு வெளியேறும் போது லாபம் அல்லது நஷ்டம் ஏற்படுகின்றது.  ஆகையினால் இந்த இரண்டு நிலைப்பாட்டிலும், முதல் மூன்று வருடமா என்று ஆராய்ந்து நியாயமான கொள்கையை வகுக்கவுள்ளதாகச் செய்திகள் உள்ளன.

10. 90 நாட்களில் வெளியே தொழில் துவங்குவோருக்கு BANKRUPTCY BILL 2015 யை பாராளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு

தொழிலில் நஷ்டம் அடையும் போது உள்ள வலியை அதை அனுபவித்தவர்கள் மட்டுமே நன்கு அறிந்து உள்ளனர்.  அந்த வலியைப் போக்க 90 நாட்களில் திவால் என்ற நிலையைக் கொண்டு வர அரசு தரப்பில் ஏற்பாடுகள் செய்ய உள்ளது.  இதனால் தொடர்ச்சியான வலியிலிருந்து சம்பந்தபட்ட நபரை விடுவிக்கலாம்.

11. ரூ.10,000 கோடிக்கான முதலீட்டுத் தொகையை ஒதுக்கியுள்ளது.

Fund of Funds மூலமாக ரூ.10,000 கோடியை ‘START UP’ நிறுவனங்களுக்கு வழங்க மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.  சிறிய ஊர்கள் ( பெரிய நகர்ப் புறம் இல்லாதவர்கள்) பெரிய அளவில் நகரங்களில் உள்ள நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவும், மேலும், அவர்களிடம் தங்களின் படைப்பைக் காட்ட வாய்ப்புகளும் போதிய அளவு கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து ரூ.10,000 கோடியை ஒதுக்கி அதில் ரூ.2000 கோடி உடனே எடுத்து வைத்துள்ளது மத்தியஅரசு.

12.CREDIT GUARANTEE திட்டம்

கடன்களுக்கு ளீredஷ்மி றூற்ழிrழிஐமிee திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது மத்திய அரசு.

13 பெண் முனைவர்களுக்கு புதிய திட்டங்கள்

பெண்கள் நம் நாட்டின் தொழிலதிபராக இருப்பதுமிகவும் குறைவு. இதைக் கருத்தில் கொண்டு நம் நாட்டின் பெண் தொழில் துறை உரிய பங்கைப் பெற அவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் திட்டங்கள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்ற அளவு, வரும் பட்ஜெட்டில் காணலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

14. துறைகள் சார்ந்த INCUBATOR உருவாக்குதல்.

எல்லாத் தொழிலும்  எல்லா இடத்தில் வளர்ச்சி பெறுவதில்லை என்பது நாம் நன்கு அறிவோம்.  கோவையில் வார்ப்பகம், ஜவுளி, மற்றும் பம்புசெட், திருப்பூரில் பனியன், ஈரோட்டில் துணி ரகங்கள், சிவகாசியில் பிரிண்டிங், ஆம்பூரில் தோல், தூத்துக்குடியில் உப்பு, கப்பல்துறை போன்று இந்தியா முழுவதும் அந்தந்த இடத்தில் புதிய தொழில் மையங்களைத் துவங்கி, தேவைப்படும ஆராய்ச்சி கூடங்கள், தொழில் சார்ந்த திறன் தேர்ச்சி பயிற்சிகள் போன்றவற்றை உருவாக்கப் புதிய முயற்சிகள் “SKILL INDIA” வுடன் இணைந்து செய்ய உள்ளது. தகுதியான ஆட்பலம் இருந்தால் உற்பத்தித் திறன் பல மடங்கு பெருகும் என்பது உலகமே கண்ட உண்மை.

15. 5 புதிய BIO-CLUSTERING BIO TECH துறைக்கு உதவியாக அமைக்கத் திட்டம்.

BIO-TECHத் துறையை வளர்த்து நம் நாட்டில் உள்ள நோயைக் குறைக்க அதற்குத் தேவையான 5 புதிய BIO-CLUSTERINGகளை அந்தந்த இடங்களில் அமைக்கவுள்ளனர்.  இதனால், மருந்துகளுக்கு அதிக விலை கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், வருங்காலத்தில் ஆயுள் கூடி உழைக்கும் நாட்களும் அதிகரித்து நாடு வளம்  பெறலாம்.

தொழிலதிபர்களின் கருத்து

1. உமேணூ சச்தேவ், CEO-CO FUNDER, UNIPHASE  SOFTWARE SYSTEM

நிறைய முன்னேற்றங்கள் உள்ளன. காப்புரிமை, வரி சலுகைகள், ஆராயச்சி மையங்கள் என பல புத்துயிர் தந்துள்ளது.

2. நாராயண மூர்த்தி – முன்னாள் தலைவர், இன்போசிஸ்

புதிய வேலை வாய்ப்புகள், புதிய முதலீடுகள், புதிய கண்டுபிடிப்புகள் போன்றவை புதிய இந்தியாவை உருவாக்க இத்திட்டம் அடித்தளம் தந்துள்ளது.

3. T.V.மோகன் தாஸ் பால்

1 லட்சம் புதிய நிறுவனங்கள் துவங்கப்படலாம், 35 லட்சம் வேலை வாய்ப்புகள் முக்கியமாக டாலர் 500 பில்லியன் முதலீடு கிடைக்கவும் நல்ல வாய்ப்புள்ளது.

ஐயங்கள்

1.‘STARTUP’ என்ற நிறுவனமாக வேண்டுமென்றால் என்ன தகுதி வேண்டும் எதை வைத்து என் நிறுவனம் ‘STARTUP’ என்று கருதுவது?
2. தொழிலை விட்டு வெளியேறும் போது என்ன ஆகும்?

3. ஊழியர்களுக்கு அளிக்கும் பங்குகளின் மீதுள்ள வரியையும் குறைத்தால் நல்லது.  புதிய நிறுவனங்கள் தொழிலில் உள்ள ஊழியர்களைக் தக்க வைத்துக் கொள்வது ஓர் நல்ல சூட்சமம்.

4. BANKRUPTCY 2015 என்ன சொல்லுகிறது?

5. ஆய்வுகள் இல்லையயன்றால் மாநில அரசின் சட்டத்திலிருந்துமா?

6. ஆவணங்கள் தாமே உறுதி செய்தலில் உள்ள சிக்கலை எப்படிக் கையாளுவது?

7. வரி இல்லாத காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை மூன்றாம் ஆண்டுக்கு மேல் உள்ள லாபத்தில் கழித்தல் செய்ய முடியுமா?

முக்கிய அம்சங்கள்:

1. வருமான வரி – முதல் 3 ஆண்டுகளுக்கு விலக்கு.

2. ஆய்வுகள் (INSPECTIONS) முதல் 3 ஆண்டுகளுக்கு விலக்கு.

3. சுய சான்றிதழ் உறுதி செய்தல் – அரசு அதிகாரிகளின் ஒப்பம் இனிமேல் தேவையில்லை.

4. CAPITAL GAINS – தொழிலுக்குத் தேவையான முதலீட்டை திரட்ட விற்கும் அசையா சொத்தின் மீது உள்ள CAPITAL GAINS வரி விலக்கு.

5. காப்புரிமைக் கட்டணம் – 80% அரசே செலுத்திவிடும்.

6. ரூபாய் 10,000/- கோடி – ஸ்டர்ட் அப் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு.

7. தொழில் முனைப்பு ஊக்க மையங்கள் துவக்குதல்
500 ஆராய்ச்சிக் கூடங்கள்
35 தனியார் மற்றும் அரசு இன்குபிபேட்டர்கள்
31 கண்டு பிடிப்பு மையங்கள் (INNOVATION CENTRES)
5 பயோ க்ளஸ்டர்கள்
7 ஆராய்ச்சி மையப் பேட்டைகள் (RESEARCH PARKS)

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் உரையாற்றலில் இருந்து ஒரு சில துளிகள்.

1. வெற்றிகரமான தொழில்களை உருவாக்குபவர்கள் ஒருமித்த சிந்தனையோடு முனைந்து ஓர் பிரச்சனைக்கு தீர்வை காண்பவர்களே.

2. அரசு தன் நிர்வாகப் பணியை குறைத்து உங்கள் உற்பத்தியையும் திறனையும் பெருக்க என்ன வழி என்று காண வேண்டும்.

3. இந்தியாவில் ஒரு கோடி பிரச்சனைகளும் குறைகளும் உள்ளன என்பதை நான் நன்கு அறிவேன். ஆனால் அதை மாற்றி அமைக்க அதே ஒரு கோடிக்கு மேல் அறிவாற்றல் மிகுந்த இந்தியர்கள் உண்டு என்றும் நானறிவேன்.

புள்ளி விவரங்கள்

1. புதிய ஸ்டார் அப்புகள் ( 2015) – 4200 – 4400 (தினமும் 3 அல்லது 4 தொழில்களாவது துவங்கப்படுகின்றன. மேலும் 2020ல் இந்த எண்ணிக்கை 12000க்கும் மேல் இருக்கும் என வல்லுனர்கள் எதிர்பார்கின்றனர்.

2. வேலை வாய்ப்புகள் – 80,000 – 85,000.

3. முதலீடு
95 மில்லியன் டாலர் வாரம் தோறும்
இதுவரை 4.9 பில்லியன் டாலர் முதலீடு         செய்யப்பட்டுள்ளது.
தொழில் முனைவோர் – 91% ஆண்கள், 9%         பெண்கள்.
உலகில் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை தர         வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில்         உள்ளது.

முடிவாக, அனைவரும்  ‘STARTUP’ திட்டத்தைத் தொழில் வட்டாரத்தில் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.  ஆனால், திட்டங்கள் பல மத்திய அரசும் அறிமுகம் செய்தது, அதைச் சரிவர நடைமுறைப் படுத்தாதது நம் நாட்டிற்கு ஒரு சாபக்கேடு.  இந்தத் திட்டத்தை நாட்டில் உள்ள சிறியநகரங்கள், கிராமங்கள் அனைத்தும் சென்றடைய வழிவகுக்க வேண்டும்.  கிராமங்களில் பலர் படிக்காத மேதைகளாகவும் உள்ளனர்.  தனது கண்டுபிடிப்புகளில் சரியான மதிப்பை அறியாதவர்கள் உள்ளனர்.  அவர்கள் எல்லோரும் இந்தத் திட்டத்தில் நன்மைகளைப் பெற்றால் நாடே நன்மை பெறும்.  அடுத்து வரும் பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்து, அதைச் சரியாக நடைமுறை படுத்தி, அதில் எழும் கேள்விகள், மற்றும் குறைகளையும் மத்திய அரசு சரியாகக் கவனித்தால் நம் நாட்டில்தான் இனி லட்சுமி குடி கொள்வாள்.