சமீபத்திய இதழ்கள்

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

விலை ரூ.25/-

மின் புத்தகங்கள்

  • இயற்கை பண்ணையம்

  • என் வீடு என் தோட்டம் பகுதி - 1 தோட்டமும் அமைப்பும்

கேள்வி பதில்கள்

கேள்வி - 1

பொது இடத்தில் மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் அல்லது கலாச்சாரம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தும்போது, ஒலி பெருக்கிகளை எத்தனை மணி வரை பயன்படுத்தலாம்? தொடர்ந்து எத்தனை மணிநேரம் பயன்படுத்தலாம்?

 

சென்னை உயர்நீதி மன்றம்
அமர்வு
நீதியரசர் முனைவர் எஸ். தமிழ்வாணன்
நீதியரசர் திரு. வி.எஸ். இரவி

W.P. (MD) No.

. 21363 / 2014
22.1.2015
அகிலன் - மனுதாரர்
எதிர்
மாவட்ட ஆட்சித்தலைவர்
விருதுநகர் மாவட்டம்
மற்றும் பலர் - எதிர்மனுதாரர்கள்

 

இந்த நீதிப் பேராணை மனுவின் 2ம் எதிர்மனுதாரரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை இரத்துச் செய்வதோடு, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூர் தாலுக்கா மாம்சபுரம் கிராமத்திலுள்ள அருள்மிகு முத்தாளம்மன் கோயில் திருவிழாவை நடத்துவதற்கும் அது தொடர்பாகக் கலைநிகழ்ச்சிகளையும் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்களுக்கு தமிழ் மாதங்களில் தை மாதத்தில் வளர்பிறை தொடங்கி முதல் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 10 நாட்கள் நடத்துவதற்கு 2ம் எதிர்மனுதாரர் அனுமதியளிக்க வேண்டும் எனக் கட்டளையிடும்படி இந்த நீதிப்பேராணை மனு இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டளை 226ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுதாரர் தரப்பில் இந்நீதி மன்றத்தில் முன்னிலையான வழக்கறிஞர் திரு. ஏ. சிவாஜி அவர்கள் தன்னுடைய வாதத்தில், வழக்கு ஆவணங்களில் பக்கம் 26-யைப் பரிசீலிக்கும்படி எங்களைக் கேட்டுக்கொண்டார். அதில் தெலுங்குப்பட்டி செட்டி உறவின் முறை என்கிற அமைப்பினர் மாம்சபுரத்தில் ஒரு கோயில் திருவிழாவை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோல் அந்தக் கிராமத்தைச் சுற்றியுள்ள பல சமூகத்தைச் சார்ந்த மக்களும் முத்தாளம்மன் கோயில் திருவிழாவை நடத்துவதற்கு பல வகைகளில் உதவி புரிந்து வருவதும், பக்கம் 28லிருந்து தெரிய வருகிறது. அந்தத் திருவிழாவிற்குத் தேவையான சிலையைத் தெலுங்குபட்டி செட்டி உறவினர் முறையினர் வழங்குவதாகவும், குலாளர், வள்ளையார், இந்து நாடார், கொடி வெளி வெள்ளாளர், விஸ்வ கர்மா யாதவர் மற்றும் அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என பலரும், பல வகைகளிலும் அந்த விழாவினை நடத்துவதற்கு உதவிகள் செய்வதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜாதி அடிப்படையில், பல சமூகத்தவர்கள் அந்த விழாவில் பங்கு பெற்று வருவதும் அந்த ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. அது ஒரு இந்துக்கோயில் திருவிழாவாகும். எனவே இந்து சமூகத்தைச் சார்ந்தவர்களில் அந்த நிகழ்ச்சியை நடத்துவதில் ஆர்வம் கொண்ட நபர்களைத் தலைவர், செயலாளர் உள்பட இதர பொறுப்புகளுக்கு நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுப்பது பொருத்தமானதாகும்.

ஜாதி அடிப்படையில் பொறுப்புகள் ஒப்படைக்கப்படுவதை இந்நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் கட்டளைகள் 14, 15 மற்றும் 16ல் மதம், இனம், ஜாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் குடிமக்களிடையே வேறுபாடு பார்க்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அது ஒரு மதம் சம்பந்தப்பட்ட திருவிழாவாக உள்ளதால் அந்த மதத்தைச் சார்ந்த எந்தவொரு நபரும் அவராகவே முன்வந்து எந்தவொரு சேவையையும் மற்றவர்களுடைய உரிமையைப் பாதிக்காத வகையில் செய்வதற்கு ஒருவருக்கு உரிமையுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 226ன் கீழ் இந்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரே மதத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களுடைய ஜாதியின் அடிப்படையில் சில வேலைகளை அந்த நிகழ்ச்சியில் ஒதுக்குவதை இந்நீதிமன்றத்தால் அங்கீகரிக்க முடியாது.

இந்த ஆண்டு விழா நடத்துவதற்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால், விழா ஏற்பாடு சம்பந்தப்பட்ட வேலைகளை ஜாதி அடிப்படையில் பிரித்தளிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்று ஜாதி அடிப்படையில் வேலைகள் ஒதுக்கப்பட மாட்டாது என்றும் மனுதாரரின் வழக்கறிஞர் குறிப்பிட்டார். அந்த விழா நிகழ்வுகள் 27.1.2015ம் தேதி செவ்வாய் கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி அதனைத் தொடர்ந்து பக்திப் பாடல்களை பாடும் நிகழ்ச்சி, பட்டிமன்றம் உட்பட மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற இருப்பதாக அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் மக்கள் வெறுக்கும் வகையிலான ரெக்கார்டு டான்ஸ் நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். - தொடரும்.

 

 

கேள்வி -1

கேள்வி -1. நானும் எனது இரண்டு மகன்களும் சேர்ந்து எங்களது வீட்டை ரூ.1.50 கோடிக்கு விற்கிறோம். இதற்கு Long Term Capital Gain கழிவு ஏதேனும் உள்ளதா?

பதில் - 1

பதில் - ஆம். நீங்கள் U/S 54 படி வீடு கட்டலாம் அல்லது வாங்கலாம். நீங்கள் இரண்டு வருடங்களுக்குள் (விற்று) இரு வீடு வாங்கலாம் அல்லது விற்று மூன்று வருடங்களுக்குள் இரு வீடு கட்டலாம். இந்த வாய்ப்பை வாழ்நாளில் ஒரு தடவை மட்டுமே பயன்படுத்த முடியும்.

கேள்வி - 2

கேள்வி - 2. நான் இரண்டு லாரி வைத்து தண்ணீர் சப்ளை செய்து வருகிறேன். எனக்கு GST வருமா?

பதில் - 2

பதில் - குடிநீரை எந்தவித மாறுபாடும் இன்றி அப்படியே எடுத்துவிற்றால் அதற்கு GST வராது.

ஆனால் நீங்கள் RO செய்து கொடுத்தால் அதற்கு 18% GST வரும். ஆனால் உங்களுடைய சப்ளை ரூ.40 லட்சம் வரை GSTக்கு உட்படாது.

 

கேள்வி - 3

கேள்வி - 3. தற்போது GSTயில் TRAN 1க்கு Notice வருகிறதே, என்ன செய்ய வேண்டும்?

பதில் -3

பதில் - நீங்கள் ஜூன் 2017 VAT Return செய்திருப்பீர்கள் அதன் நகளும் Central Excis நகலும் இத்துடன் ITCகான Bill Copy-யும் சேர்த்து ஒரு கவரிங் லெட்டருடன் அந்த அந்த Circle-ல் தாக்கல் செய்ய வேண்டும்.

கேள்வி - 4

கேள்வி - 4. நான் ஒரு தொழில் நடத்தி வருகிறேன். புது வருட காலண்டரை Gift-ஆக கொடுத்தால் GSTயில் பாதகம் என்ன?

பதில் - 4

பதில் - Sec17(5)படி Free Gift கொடுத்தால் அதற்கான ITCஐ Reverse செய்ய வேண்டும். மற்றபடி எந்தவித பாதகமும் இல்லை.

 

Courtesy - Vibrations of Mind